சுதந்தர இந்தியாவில் முதன்முறையாக இந்திய மக்கள் தொகையை சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று ஒவ்வொரு சாதியினரும் நம்புவதால் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகமான பள்ளர்களோ, தங்களை எந்தப் பிரிவில் (SC, BC, MBC, DNC) பதிவு செய்வது என்று புரியாமல் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும் (நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில் இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். இதன்பிறகே தமிழ்நாட்டில் சாணார், பள்ளிகளை தவிர்த்த 76 சாதிகளை (பள்ளர், பறையர், சக்கிலியர், உள்ளிட்ட) பட்டியல் இனத்தில் சேர்த்தனர். அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
5. பசுவை வணங்காதவர்கள்
6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே புத்தகத்தில் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் பள்ளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக பள்ளர்களை மதுரைக்குத் தெற்கே குடும்பன் என்றும், திருச்சி கரூர் பகுதிகளில் மூப்பன் என்றும், கொங்கு பகுதியில் பண்ணாடி என்றும் பட்டக்காரர் என்றும் அழைப்பார்கள் என்று எழுதியுள்ளார். இவர்களுக்கு உதவியாக காலாடி என்றும் மண்ணாடி என்பவர்களும் இருந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசு வரையறை செய்தபடி பள்ளர்கள் தீண்டத்தகாதோர் என்று முடிவு செய்தால், எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளபடி குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் SC பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறில்லை? பட்டியலில் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
1. குடும்பன் SC பட்டியல் (SC 35)
2. மூப்பன் BC பட்டியல் (BC 65)
3. காலாடி BC பட்டியல் (BC 35)
4. காலாடி DNC பட்டியல் (DNC 28)
5. மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.
குடும்பன் தீண்டத் தகாதவன். ஆனால், அவனுக்குப் படைவீரனாக இருந்த காலாடி (பாண்டிய படை மறவர்) மற்றும் குடும்பனின் உப தலைவர்களான மண்ணாடி, மூப்பன் ஆகியோர் BC பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இது எப்படி? மேலும், தீண்டாமையும், கோவில் நுழையாமையும் SC பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்றால், தமிழ்நாட்டில் சாணார்களே (நாடார்கள்) அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
குடும்பன் என்ற சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தால், இந்தியா முழுவதிலும் ஒரே பட்டியலில் (SC) அல்லவா அவர்கள் இருந்திருக்க வேண்டும்? மாறாக தமிழ்நாட்டில் SC பட்டியலிலும் மற்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினராக உயர்சாதிப் பட்டியலிலும் இருப்பது விநோதமாக இல்லையா?
தீண்டாமைக்கு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பள்ளர்கள் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இன்றுவரை வேளாண்மையே இவர்களுடைய தொழில். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, கோவை, பேரூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளர்கள் சார்ந்த பல விழாக்கள் இன்றும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக உள்நுழைந்தவர்கள் சாணார்களும் (நாடார்) பறையர்களுமே ஆவர். பள்ளர்கள் அல்லர். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும், மறுநாள் அனுப்பானடி தெப்பத் திருவிழாவிலும் பள்ளர்களின் தலைவனான அப்பகுதி ஊர் குடும்பனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, பள்ளர்களில் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
தலித் அரசியல் பேசும் அறிவுஜீவிகள் அனைவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் உள்ளிட்ட அனைவரையும் தலித்துகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, SC பட்டியலில் உள்ளவர்களைத் தீண்டத்தகாத தலித்துக்கள் என்றும், இதர BC, MBC பட்டியலில் உள்ளவர்களை உயர் சாதி இந்துக்கள் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். பெரியாரிய வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மார்க்சிய அறிஞர்கள் ஆகியோரும் இதனை வழிமொழிகின்றனர்.
இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், SC பட்டியலில் உள்ளதாலேயே குடும்பன் தாழ்ந்தவனாகவும் தீண்டாமைக்கு உட்பட்ட தலித்தாகவும் BC பட்டியலில் உள்ளதாலேயே காலாடி, மூப்பன், மண்ணாடி ஆகியோர்களெல்லாம் சாதி இந்துக்களாகவும் வாழ்ந்து வருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஒரே குழுவைச் சேர்ந்த அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே சமயத்தில் தலித்தாகவும், உயர் சாதி இந்துக்களாகவும் வாழ முடியும்? பள்ளர்கள் மட்டும் எந்தப் பட்டியலில் இருந்தாலும் தலித்துகள் என்றே அழைக்கப்படுவது ஏன்? மிகவும் பரிதாப நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC 24) உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆதிக்க சாதியினராக மாறிவிடுவார்களா?
சமீப காலமாக SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஆதிதிராவிடர் என்றே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது தமிழக அரசு. தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பின்போது SC பட்டியலில் உள்ள உட்பிரிவுகளுக்குப் பதிலாக அனைவரையும் ஆதிதிராவிடர் என்றே கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. BC, MBC, DNC, SC உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பள்ளர்களை, SC பட்டியலில் உள்ள ஆதி திராவிடர் (பறையர்) பெயரில் அழைப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறானது.
சாதிவாரி பகுப்பில் இவ்வளவு குழப்பங்கள் என்றால், தலித் அரசியலில் அதைவிடப் பெரிய குழப்பங்கள்! உண்மையில், தலித், தலித் ஒற்றுமை என்பதெல்லாம் ஒருவித மாயையே. தமிழர்களை சாதிய கண்ணோட்டத்தில் தலித்துகள் என்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் பிரித்து அவர்களை ஒன்றுபட முடியாத வண்ணம் குழப்பும் அரசியலும்கூட.
--- செல்வா பாண்டியர் ----
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
மேலதிக தகவல்களுக்கு:
ReplyDeletehttp://mallarchives.blogspot.com/
பட்டியல் வகுப்பில் இருந்து முழுவதுமாக விலகி தனி இனமாக என்றைக்கு அறிவிப்பு செய்யபடுகிறதோ, அன்று தான் மருத நில மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பெருமையை தமிழ் கூறும் நல் உலகம் பெருமை அடையும்.
ReplyDeleteமூப்பன் BC பட்டியல் (BC 65),காலாடி BC பட்டியல் (BC 35),காலாடி DNC பட்டியல் (DNC 28),மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
ReplyDeleteஇவர்கள் தென்பகுதியில் இருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் வருவார்கள் அதுவே கோவை ஆற்காடு போன்ற பகுதியில் இருந்தால்தான் நீங்கள் சொன்ன தகுதிபட்டியலில் வருவர் ..சாதிபட்டியலை நன்றாக பாருங்கள் அதில் அடைகுறியிட்டில் மாவட்டங்கள் தவிர்த்து என குறிப்பிட்டிருபார்கள்...
இதுப்போல வெளிமாநிலம் சென்றால் அங்கு உங்கள் சாதியின் பெயர் இல்லை என்றால் பட்டியலில் FC சேர்ந்து விடுவார்கள். இது குறிப்பிடாத சாதி பெயர் எண் (999) கீழ் வரும்.
இப்போது உத்திரபிரேதேசத்தில் ஒரு தாழ்ந்தப்பட்ட வகுப்பு தமிழகத்தில் இல்லாமலிருந்தால் அவருக்கு SC தகுதி கிடைக்காது.
இந்த விவரம் தெரியாமல் நாங்கள் வெளிமாநிலத்தில் உயர்ந்த சாதி தமிழகத்தில் எப்படி தாழ்ந்த சாதி என கேட்டால் அது உங்கள் அறியாமையே!
Mr thagu 1957 kamaraj period la entha caste listed join pannaga ..athum some politics nalla....unakku ne thaan periya alu sollanumm..vaiku vanthathu la pesura ah...
DeleteTamil caste la moopen Bc kaladi Bc //Tamilnadu la evolo confusion ..una mari aluga caste veri pidochi poi erukurathu nalla thaan..ennum tamilnadu orupadama ah eruku...for example!!Chittyar enga BC ..North antha caste ella athu automatic FC ku pogum.
Mr thagu 1957 kamaraj period la entha caste listed join pannaga ..athum some politics nalla....unakku ne thaan periya alu sollanumm..vaiku vanthathu la pesura ah...
DeleteTamil caste la moopen Bc kaladi Bc //Tamilnadu la evolo confusion ..una mari aluga caste veri pidochi poi erukurathu nalla thaan..ennum tamilnadu orupadama ah eruku...for example!!Chittyar enga BC ..North antha caste ella athu automatic FC ku pogum.
நீ என்ன சாதி
DeleteSt
Deleteசெம்மான் ஜாதியில் மூப்பன் அக்காசாலை மனப்பாட்டன் பாளையபட்டான் இன்னும் நிறைய குடுண்ப பெயர் கள் உண்டு பூமாலை மருகூறான் கருண்குழதான் கூளையன் குடுண்பன் அம்பலகாரன் இன்னும் நிறைய குடும்ப பெயர் உண்டு
DeleteAda yida Othikkeedu ethukkuppa Namathu nilam Eelathill Thamizh kudikalukku Yidamey kidayathu.. Aanal Aathianthirar, Aathi Thelunkar, Aathikarnadakar, Eena Yinku vantha Anaivarukkum Muthal Yidamthaan Yen yenil Nangak Vantherikalukku Katti Koduthu, Kooti koduthu, Ellam peruvom. Ippothum Yinimelum Appadithaney R. Thiyaku... Aanall 1950-ikku munbu sttapadiyum, Atharkku munbu Yithellamm kidayathu enbthu engallukku theriyum... Aanalum kathaipom Yinna Thiyakku.. Nammakku Velayey athaney...
ReplyDeleteTHANKS SIR
ReplyDeleteவரலாற்றில் தெரிந்த தகவல்கள் தெரியாத உண்மைகளை தமிழர் வரலாற்று ஆய்வு மையத்தின் ஓர் உண்மை தமிழ்நாட்டின் சாதி வரலாற்றை உலகிற்கு வழங்கிய வரலாற்று குழுவிற்கு என் மனதின் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇக்கட்டுரையை எழதியவர் அவர் திராவிட இனமா ஆரிய இனமா என்று புரியவில்லை இந்து மனுதர்மத்தை அவர் ஏற்று கொண்டார் போல் தோன்றுகிறது இவருக்கு தலித் என்றுகூறிக்கொள்ள கூச்சம் என்றால் பள்ளர்களின் மறுபெயர் அந்தணர் என்று கூறிகொண்டு கோவில் குருக்கள் ஆகவேண்டியது தானே வருனாசிரம தர்மம் என்ற அதர்மம் தான் இத்தனை குழப்பங்களுக்கம் பிரச்சனைகளுக்கம் காரணம் என்று இந்த மேதாவிக்கு தெரியவில்லை போலும்
ReplyDeleteTrue: வருனாசிரம தர்மம் என்ற அதர்மம் தான் இத்தனை குழப்பங்களுக்கம் பிரச்சனைகளுக்கம் காரணம் என்று இந்த மேதாவிக்கு தெரியவில்லை போலும்
Deleteசாதிகள் அனைத்தும் உயர்ந்ததுதான் குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சலுகைகள் கொடுபபது சரியல்ல. சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியானவருக்கு(குடும்ப வருமானம் )சலுகைகள் கொடுக்க வேணடும்.
DeleteAnthanar means man living with the righteous. In your comment you made Anthaner as Brahmin.
Deleteகாலாடி என்பவர்கள் பள்ளர் குடும்பன் இவர்களுக்கு உதவியவர்கள் தான் அவர்களின் சொந்தங்கள் கிடையாது ஆக காலாடி என்போர் பள்ளர் சமுகம் கிடையாது
ReplyDeleteநான் காலாடி தான். என்னுடைய சாதிச் சான்றிதழில் "இது பள்ளர் குலத்தவருக்கு வழங்கப்படும் காலாடி சாதிச் சான்றிதழ்" என்று தான் இருக்கும். இது தெரியாமல் முட்டாள் தனமாக பேசாதீர். காலாடி பள்ளர் ஒன்று தான்....
Deleteகாலாடி பள்ளரில் ஒரு பிரிவு.
Deleteஅப்படில்லை நண்பா
Deleteஒரு ஆட்சி நிலைத்து நிற்க வேண்டுமானால் சரியான கட்டுமானம் தேவை அப்படி பாண்டியர்கள் பயன்படுத்தி வந்த முறைதான் ஊர்குடும்பு முறை இந்த அமைப்பில் பள்ளர்கள் தங்களின் அதிகாரத்திற்கேற்ப பெயர் சூட்டிகொண்டனர். உதாரணமாக ஒரு வங்கியை நிர்வகிப்பரை மேலாளர் என்றும் அவர் கூறக்குடிய பணிகளை முடிப்பவர்களுக்கும் கணக்காளர்,காவலர், மற்ற பெயர்களும் உள்ளன.
அதனால்தான் பாண்டியர்களான பள்ளர்கள் தங்களின் அதிகாரத்திற்கேற்றார்போல் குடும்பன், பதவி காலாடி, மூப்பன், பண்ணாடி, மண்ணாடி என்பது தாங்கள் வகித்த பதவியின் பெயர்கள் பிற்காலத்தில் ஏற்படட்ட நாயக்கர் ஆட்சியில் பாண்டியர்களை ஒடுக்க நினைத்தனர் அதனால் பள்ளர்கள் நிலங்கள் அதிகளவில் அபகரிக்கப்பட்டது இந்த ஒடுக்கத்திலிருந்து குடும்பன், காலாடி, பண்ணாடி, மண்ணாடி,மூப்பன் போன்ற பெயர்களை சாதி பெயராக மாற்றி தங்கள் நிலங்களை காத்துக்கொண்டார்கள். நாம் ஏன் நம் தலைவர்களை பார்க்க வேண்டும் நாம் இணைந்து வாழ்வோம்.
Arumai
DeleteMBC வகுப்பில் வரும் ஜாதியை சேர்ந்தவர்கள் யார் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என தெரிய வேண்டும்....
ReplyDeleteவரலாற்றை பொருத்தவரை தேவேந்திரன் தான் உயர்ந்த சாதி மற்றவரெல்லாம் தாழ்ந்த சாதிகளெ........
ReplyDeleteSuper
Deleteகுடும்பர் வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
ReplyDeleteநாடார்கள் மீது ஏன் இவ்வளவு கோபம் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்திலேயே நாடார்கள் சங்கம் தொடங்கி விட்டார்கள் தொழில் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் தங்களுக்கான வங்கிகள் அப்போதே ஆரம்பித்து விட்டார்கள் அக்காலத்தில் நெசவு தொழில் மூன்று சமுதாயத்திற்க்கு அதில் நாடார் தறி தான் பெரிய தறி நாயக்கர் ஆட்சி காலத்தில் விரட்டி அடிக்கப்பட்ட நாடார்கள் தென் மாவட்டங்களில் மட்டுமே வாழ்தார்கள் அப்படி இருந்தும் கட்ட பெம்மனால் நாடார்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள் பின்னர் நாடார்கள் கட்டபெம்மனை விரட்டியாடித்த வரலாறும் உண்டு வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் தான் மீண்டும் ஏற்க்கனவே வாழ்ந்த பகுதிக்கு வருகிறார்கள் அப்போது தொடங்கியது நாடார்களின் வளர்ச்சி நாடார்கள் தங்களை எப்போது நாங்கள் தாழ்ந்தவர்கள் என்று சொன்னார்கள் ஒருபோதும் இல்லை என்பதுதான் உண்மை நாடார்கள் தமிழகம் கேரள முழுவதும் ஆடை அனியாமல் இருந்தது போல சித்தரிப்பது தவறு தமிழகத்தில் இல்லை கேரளாவிலும் கூட அனைத்து இடங்களிலும் இல்லை திருவிதாங்கூர் மட்டுமே இந்த தோல் சீலை கலவரம் ஏன் முதலில்17சாதிக்கு இருந்து அதைமாற்றி அதில்18ஆவதாக நாடார் சேர்க்கபட்டார்கள் இதை எதிர்த்து நாடார்கள் மட்டுமே போராடினார்கள் பல உயிர்களை இழந்து நாடார்கள் வெற்றி பெற்றார்கள் இவர்களின் போராட்டத்தின் விளைவு போராடாத ஜாதி மக்களுக்கும் பின்னர் தடை நீக்க பட்டது ஏன் மற்ற 17 ஜாதி மக்ககள் இதை எதிர்த்து போராட வில்லை சற்று சிந்தியுங்கள் நன்றி மெய் பொருள் காண்பது அறிவு
ReplyDeleteசிறப்பான பதில்...
Deleteபோரடுபவனுக்குத்தான் வரலாறு
DeleteArumai nanbare
DeleteSanar enpathu kiljaathitha
Deleteகல்தோன்றி மண்தோன்றா காலத்தில் மூத்தகுடி தமிழ்குடி அதில்ஆராய்ச்சி செய்து பாா்த்தால் உலகின் நாகரிகத்தின் முதல் மனிதன் தமிழன் தான்"
ReplyDeleteஒரு ஆட்சி நிலைத்து நிற்க வேண்டுமானால் சரியான கட்டுமானம் தேவை அப்படி பாண்டியர்கள் பயன்படுத்தி வந்த முறைதான் ஊர்குடும்பு முறை இந்த அமைப்பில் பள்ளர்கள் தங்களின் அதிகாரத்திற்கேற்ப பெயர் சூட்டிகொண்டனர். உதாரணமாக ஒரு வங்கியை நிர்வகிப்பரை மேலாளர் என்றும் அவர் கூறக்குடிய பணிகளை முடிப்பவர்களுக்கும் கணக்காளர்,காவலர், மற்ற பெயர்களும் உள்ளன.
ReplyDeleteஅதனால்தான் பாண்டியர்களான பள்ளர்கள் தங்களின் அதிகாரத்திற்கேற்றார்போல் குடும்பன், பதவி காலாடி, மூப்பன், பண்ணாடி, மண்ணாடி என்பது தாங்கள் வகித்த பதவியின் பெயர்கள் பிற்காலத்தில் ஏற்படட்ட நாயக்கர் ஆட்சியில் பாண்டியர்களை ஒடுக்க நினைத்தனர் அதனால் பள்ளர்கள் நிலங்கள் அதிகளவில் அபகரிக்கப்பட்டது இந்த ஒடுக்கத்திலிருந்து குடும்பன், காலாடி, பண்ணாடி, மண்ணாடி,மூப்பன் போன்ற பெயர்களை சாதி பெயராக மாற்றி தங்கள் நிலங்களை காத்துக்கொண்டார்கள். நாம் ஏன் நம் தலைவர்களை பார்க்க வேண்டும் நாம் இணைந்து வாழ்வோம்.
Devendrakula velalar is not sc list Devendrakula velalar is first major community of Tamil cast list
ReplyDeleteDevendrakula velalar is 87 country is living people currently year so devendrakula velalar is world history major list
ReplyDeleteயாரும் உயர்ந்தவன் இல்லை
ReplyDeleteயாரும் தாழ்ந்தவன் இல்லை
உண்மை
Deleteவரலாறு தெரியாமல் பள்ளர்கள் போலியாக சில வரலாற்றை முன் வைக்கிறார்கள் 18ம் நூற்றாண்டிலேயே வட ஆர்காடு கணக்கெடுப்பில் பரையர்களின் ஒரு பிரிவான வள்ளுவர்கள் கோவில்கல்வெட்டுகள் பூஜை செய்யும் குருக்கலாக காட்டப்பட்டிருகக்கும் போது போலியாக பரையர்களுக்கு அனுமதி இல்லை என்பது கற்பனையான வாதம் உத்தபுரத்தில் கட்டப்பட தீண்டாமை சுவர் மற்றும் ஆலயமறுப்பு கூட பள்ளர்களுக்கு தானே தவிர பரையர்களுக்கு இல்லை அந்த கோவில் பரையர்களின் கோவில் என தமிழக அரசியல் உள்ளிட்ட இதழ்களில் பதிவு செய்யபட்டதையும் கவனத்தில் கொள்ளனும்
ReplyDeleteவரலாறு தெரியாமல் பள்ளர்கள் போலியாக சில வரலாற்றை முன் வைக்கிறார்கள் 18ம் நூற்றாண்டிலேயே வட ஆர்காடு கணக்கெடுப்பில் பரையர்களின் ஒரு பிரிவான வள்ளுவர்கள் கோவில்கல்வெட்டுகள் பூஜை செய்யும் குருக்கலாக காட்டப்பட்டிருகக்கும் போது போலியாக பரையர்களுக்கு அனுமதி இல்லை என்பது கற்பனையான வாதம் உத்தபுரத்தில் கட்டப்பட தீண்டாமை சுவர் மற்றும் ஆலயமறுப்பு கூட பள்ளர்களுக்கு தானே தவிர பரையர்களுக்கு இல்லை அந்த கோவில் பரையர்களின் கோவில் என தமிழக அரசியல் உள்ளிட்ட இதழ்களில் பதிவு செய்யபட்டதையும் கவனத்தில் கொள்ளனும்
ReplyDeletePallar
ReplyDeleteNadar makkal evvalavu vasathi eppadi evarkal pirapile raja vamsam
ReplyDeleteஏன் இப்படி வாதம் செய்கின்றார்கள். ஒரு சாதியினர் மற்றொரு சாதியை ஒடுக்குவதில் காட்டும் அக்கறையை விடுத்து நாடார் மக்களைப்போல் கடினமாக உழைத்து தனது சாதியை உயர்ந்த சாதியாக மாற்றுங்கள். நாடார்கள் முன்னர் பட்டியல் பாதியாக இருந்திருக்கலாம் ஆனால் இன்று உயர்ந்து விட்டனர். அது அவர்களின் உழைப்பு. ஆகவே வீன வாதத்தலை கைவிட்டு நுழைத்து சமூக அந்தஸ்தில் உயரும் போது அரசே உங்களை பட்டியலில் இருந்து மாற்றிவிடும். பணம் எதையும் செய்யும். பணக்காரர்கள் ஒரே சாதியினர்.
ReplyDeleteஅனைவரும் ஒன்றே!சாதீயை
ReplyDeleteஅழித்திடு இன்றே!
Devendra kula velalar velka
ReplyDeleteபட்டங்கட்டி கடையருக்கும் பள்ளர்பரிவில் வரும் இதர கடையர்களுக்கும் என்ன வித்தியாசம். விபரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.
ReplyDelete