Monday, June 17, 2013

தமிழ் தேசிய சிக்கல்: ஒரு விரிந்த பார்வை





"இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை ஆய்வாளர்கள் மத்தியில் மறுக்கும் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு."




இது வரை வெளிவந்து இருக்கும் எந்த வரலாற்று புத்தக ஆசிரியரும், இப்படி நேரடியாக விவாதத்துக்கு அறைகூவல் விடுத்தது இல்லை. அந்த புத்தகம் சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற 'குடிமரபியல் ஆய்வு நூல்' புத்தகம் ஆகும். தடைக்கு காரணமாக, "சாதி மோதல்களை தூண்டும், மற்ற சாதி ஆட்களை கொச்சை படுத்தி எழுதப்பட்டு உள்ளது, பொய் தகவல்கள்" என்று பொத்தாம் பொதுவாக காரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இவை உண்மையான காரணங்களா, வேறு ஏதும் உள்நோக்கம் உண்டா என்பதை நாம் விரிவாக காணும் முன்பு, இது சார்ந்த வேறு சில விசயங்களை அலசி ஆய்ந்து விட்டு, தொடர்வோம்.

திராவிட எதிர்ப்பு நிலை
* 'இனி திராவிடத்தை எதிர்ப்பதே என் வாழ் நாள் நோக்கம்' என்று முழங்கியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.(பொறுப்பான ராமதாஸ் அவர்களின், உணர்ச்சி வயப்படும் அரசியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.) அவரின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உண்மையான காரணம் 'அவரின் சாதி வெறி' என்று நம்ப வைக்கபட்டாலும், அதன் உண்மையான காரணம் அவரின் திராவிட எதிர்ப்பு நிலையே. இது இன்றைய அரசியலை ஆய்ந்து நோக்கும் அனைவரும் அறிந்ததே. இது பலகாலம் திட்டமிடப்பட்டு இன்று காத்திருந்து வீழ்த்தப்பட்டு உள்ளார் திரு.ராமதாஸ் அவர்கள்.
"நாங்கள் தோற்றாலும், ராமதாஸ் அவர்களை அவர்களின் சொந்த தொகிதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் வீழ்த்தியதை தான் திமுக தனது வெற்றியாக நினைக்கிறது" என்று மு.க ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அளித்த பேட்டியே அதற்க்கு சாட்சி.

* இதே திராவிட எதிர்ப்பு நிலையில், அதனை மைய்யப்படுத்தி, அதை வரலாற்று தரவுகளுடன் சுமார் 7 வருட ஆய்வுக்கு பின்பு புத்தகமாக எழுதியவர் தான் திரு.செந்தில் மள்ளர். 'நாடார் தான் மூவேந்தரின் வாரிசு' என்று அதிமுக அரசு அறிவித்தபோது, 'வரலாறு தெரியாத முதல்வர்' என்று பகிரங்கமாக மறுத்த ஒரே நபர் செந்தில் மள்ளரே ஆவார்.
(Read: http://mallarchives.blogspot.in/2012/12/1.html).

இந்த புத்தகத்துக்கு கீழ் கண்ட திராவிட எதிர்ப்பு அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் யாரும் பள்ளர் கிடையாது.
* 'நாம் தமிழர்' சீமான்
* முனைவர் அருகோ
* அறிவர் குணா
* தன்மாணன்
* புதுக்கோட்டை பாவாணர்
* புலவர் காசி ஆனந்தன்
அரசு சொல்வது போல உப்பு சப்பில்லாத 'சாதி மோதல், பொது அமைதிக்கு குந்தகம்' போன்றவை தான் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'சோழர் வரலாறு' புத்தகத்தில் 'வன்னியரை' பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். ஆனால் அது போன்ற எந்த வரலாற்று புத்தகமும் தடை செய்யப்படவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த புத்தகத்தில் தமிழ் சாதிகளான முக்குலத்தோர், பிள்ளை போன்ற சாதிகளை பற்றி சர்ச்சைக்குரிய பதிவுகள் இருப்பது உண்மை. ஆனால் அவை யாவும் புத்தகத்தின் ஆசிரியர் கூறிய தகவல்கள் அல்ல என்பதும், அந்த அந்த சமூக ஆட்கள் எழுதி வைத்த தகவல்களை தகுந்த மேற்கோளுடன் எடுத்து விவரித்திருந்தார் என்பதும் புத்தகத்துக்கு அணிந்துரை அளித்த அனைவருக்கும் தெரியும். அப்படி குறிப்பிட்டது மட்டும் சரியா,தவறா என்ற ஆய்வுக்கு நாம் செல்லவில்லை. ஆனால் 'இன்ன இன்ன தகவல்கள் பொய், இன்ன இன்ன பக்கங்களை நீக்குக' என்று எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல், ஒட்டு மொத்தமாக ஒரு 'குடிமரபியல் ஆய்வு நூலை' தடை செய்யும் போதே, அந்த புத்தகத்தில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?

"பள்ளரே பாண்டியர், அவர்களே தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு உள்ளனர், அந்த நாயக்கர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றும் திராவிட மாயைக்குள் தமிழர்களை சிக்க வைத்து, முள்ளி வாய்க்கால் வரை இந்த இனத்தை சீரழித்து உள்ளனர்." --- இது தான் அந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த சாராம்சம்.

உண்மையில் இந்த புத்தகம் யாருக்கு கலக்கத்தை தர வேண்டும்? நாயக்கர்களுக்கும், திராவிடருக்கும் தானே? ஆனால், இங்கே கலக்கம் அடைவது யார் தெரியுமா...? விஷயம் தெரியாத, ஒரு சில 'முக்குலத்தோர்' நண்பர்களும், அமைப்புகளும் தான். ஏன் இவர்களுக்கு இந்த மனநிலை? என்ன காரணம்? இதற்க்கு பதிலும் அந்த புத்தகத்திலேயே உள்ளது. அந்த முக்குலத்து நண்பர்லின் கூற்றுப்படி 'தாங்கள் தான் பாண்டியர் மற்றும் மூவேந்தர் வம்சம்' என்பதும், கீழ்நிலை சமூகமாக அவர்கள் கருதும் 'பள்ளர்கள்' அல்ல என்பது தான் அவர்கள் வைக்கும் வாதம். இதை மேலோட்டமாகவே நாம் விமர்சனம் செய்வோம்.

> 'பாண்டியன் குலநாசினி' என்றும், 'வைகை வளநாடன் கொட்டமடக்கி'  என்றெல்லாம் பட்டம் தரித்த மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்' என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். 'பாண்டியன்' வீழ்த்தப்பட்டது 'நாயக்கர்களால்' தான் என்பது வரலாறு. அப்படி என்றால், கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்? ஆனால், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், எதற்கு மறவர்கள் 'பள்ளருடன்' மோதலை கடைபிடிக்க வேண்டும்?  'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகம் தடை செய்யப்பட்டதால், வேறெந்த தமிழ் சமூகத்துக்கும் இல்லாத மகிழ்ச்சி ஏன் இவர்களுக்கு வருகிறது?

> 'பள்ளு இலக்கியம்' என்பது நாயக்கர்களால் எழுத்தப்பட்ட, 'பள்ளர்' இனத்தை இழுவு படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கியமாகும். 'மறவர்கள் தான் பாண்டியர்கள்' என்றால், சம்பந்தமே இல்லாமல் நாயக்கர்கள் எதற்கு 'பள்ளர்களை' இழிவு படுத்த வேண்டும்?

> நாயக்கருக்கும், பள்ளருக்கும் இடையே முக்குலத்தோர் ஏன் ஒரு தடுப்பாக நிற்கின்றனர்? இந்த கேள்விக்கான பதிலை தான் அப்பட்டமாக 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்தில் எழுதி உள்ளனர். வரலாற்றில் அன்று மட்டும் அல்ல, இன்றும் கூட திராவிட ஆட்சியாளர்களுக்கும், திராவிட கருத்தியலுக்கு முட்டு கொடுத்து, தமிழ் சாதியான பள்ளரை எதிர்ப்பதன் மூலம், காட்டி கொடுப்பு வேலைகளை ஜோராக செய்து வருகின்றனர்.அதற்க்கு கைமாறாக அன்று ஜமீன்களையும், இன்று அரசியலில் பிரதிநிதி துவமும், பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு அரசு விழாவும், ஊடங்களில், திரைப்படங்களில் அவர்களுக்கென்று பிரத்தியேக பிம்பத்தையும் உருவாக்கி தந்துள்ளனர். ஒரு தமிழ் சாதியை வைத்து, இன்னொரு தமிழ் சாதியை வீழ்த்தும் திராவிட மாயைக்குள் இவர்கள் சிக்கி இருந்தாலும்,உண்மை தெரிந்தாலும் அதை விட்டு வெளியே வர மறுக்கின்றனர்.

முக்குலத்தொரே மூவேந்தர்களாக என்று வைத்து கொண்டாலும், இந்த 'ஆண்ட பரம்பரை' என்ற வெற்று பீத்தலை தாண்டி, தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க இவர்களிடம் எந்த ஒரு அரசியலும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், அப்படி இயங்கும் சக்திகளுடன் (இவர்களில் ஒரு சிலர் தவிர), மற்றவர்கள் சேர்ந்து இயங்க மறுக்கின்றனர். இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவே.

எனவே முக்குலத்து சொந்தங்களே,
* நீங்கள் இங்கே அரசியல் அரங்கில் தனிமை படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு குடையின் கீழ் செயலாற்ற வாருங்கள்.
* தமிழ் சமூகத்தின் முல்லை நிலக்குடி மக்களான நீங்கள், இவ்வாறு சக தமிழருடன் மல்லு கட்டி கொண்டு நிர்ப்பது ஏற்புடையதா?
* ஒரு வேலை நீங்கள் வராவிட்டாலும், தமிழருக்கான அரசியல் நன்றாகவே நடக்கும். ஆனால் வரலாறு உங்களை என்ன என்று குறித்து வைக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் --

பள்ளர்/மள்ளர் என்பது சாதியா? இனமா?

'தமிழன் உலகாண்டான்' என்பதற்கு அடிப்படையாய் காட்டப்பட்ட பல இடங்களில் 'பள்ளர்/மள்ளர்' என்றே அடையாளங்கள் அதிகமாய் இருந்ததை சுட்டி காட்டி இருந்தோம். அதில் சில நண்பர்களுக்கு பிணக்கும், சாதி மேன்மை பாராட்டுவதாகவும் எண்ணி இருந்தார்கள். அவர்களுக்கான பதிவு இது.

இலக்கியம் கூறும் ஐந்து வகை நிலங்களும், மக்களும்



இலக்கிய பார்வையில் மள்ளர்/பள்ளர்

*  'செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்'  -- பிங்கல நிகண்டு

* “"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்"” --- முக்கூடற் பள்ளு

* “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” --- கம்பராமாயணம்

எனவே இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கவே மள்ளர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளதையும், அப்படி குறிக்கப்படும் மள்ளர்கள் ஒரு இனமாகவும், குலமாகவும் தான் காட்டப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று பார்வையில் மருத நில குடிகள்
வேளாண்மையும், அது சார் தொழில்களும், இவற்றை நிர்வகிக்கும் அரசும், வணிகர்களும், அரசை வழி நடத்தும் அனைத்து மக்களுமே மருத நில குடிகளான மள்ளர்கள் ஆவார்கள். இதில் இருந்து 'பள்ளர்'(இன்றைய பள்ளர் சாதி மக்கள்)  மட்டுமே மள்ளரா என்ற கேள்வி அர்த்தமற்றதாகிறது. மேலும் அந்த மள்ளரின் பணி  வேளாண்மை மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டமும் அடிபட்டு போகிறது.

அப்படி என்றால் இன்றைய 'பள்ளர்கள்'(சாதி)  மட்டும் தான் 'மள்ளரா',வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி இயல்பாக எழும். அதை தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுவோம். உலகம் முழுக்கும் பள்ளர் என்ற சொல்லாடலும், மள்ளர் என்ற சொல்லாடலும், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழனின் அடையாளம் அனைத்திலும் 'பள்ளர்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்த படுவதில் இருந்தும், அந்த பெருமைக்கு உரியவர்கள் பள்ளர்கள் மட்டுமா என்பதை தெளிவான பார்வையில் இனி காண்போம்.

உலகின் அனைத்து நாகரிகத்திலும் முதன்மையானது உழவு தொழிலே. அந்த உழவுத் தொழிலை ஒட்டியே மற்ற தொழில்களும், அரசும் தோன்றின. எனவே தான் உலகம் முழுதும் உழவு தொழிலை சிறப்பிக்கும் வகையிலும், தான் அந்த வேளாண் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையிலும், மற்ற தொழில்களை விடுத்து தன்னை ஒரு வேளாண் குடி சார்ந்தவனாக காட்டிக் கொள்ளவே தமிழன் விரும்பியுள்ளான். இதனாலேயே (ஆயர் என்ற ஒரு சில சொற்களை தவிர), கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 'பள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான். இதன் மூலம் மருத நில மூத்த குடியினரை சிறப்பித்துள்ளான். இந்த அடையாளத்தை தான் இன்றைய 'பள்ளர்' சமூக மக்கள் தக்க வைத்து உள்ளனர். 

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பள்ளர் பிரிவையும் (இலக்கியம் சொல்லும் இன,குல மள்ளர்கள்) ஒருங்கே குறிக்கும் அர்த்தத்தில் தான் உலகில் விரவிக் கிடக்கும் பள்ளரையும், தமிழன் அடையாளத்தையும் பார்க்க வேண்டுமே தவிர, 'பள்ளர்' என்ற ஒற்றை சாதி அடையாளமாக அல்ல.



மரபணு அடிப்படையில் மருத நில குடிகள்
NOTE: இங்கே அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.


ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

தர்க்க அடிப்படையில் மருத நில மக்கள் இருப்பு:
உலகம் முழுவதிலும் தமிழன் தடத்தில் 'பள்ளர்' இருக்கிறார்கள் என்றால், அந்த இனம் இங்கே பெரும்பான்மையாக கோலோச்சி இருக்க வேண்டும். ஆனால் இன்று 'ஆறில் ஒரு பங்கு அளவு' மட்டுமே இருக்க கூடிய 'பள்ளர்' சமூகத்தால் அது சாத்தியமா? 

'கடலோடியான' தமிழன் ஒரு கப்பலை கட்டி இயக்கவே கீழ் கண்ட தொழில் சார் மக்கள் தேவைப்படுகிறார்கள்.

* பருத்தி உற்பத்தி
* பருத்தி நூற்ப்பு & பாய் மரம் செய்தல்
* மரம் இழைத்தல்
* கப்பலை கட்டும் நிபுணர்
* கப்பலில் செல்ல தேவையான உணவை தயார் செய்தல்
* வானியல் நிபுணர்
* கடலியல் நிபுணர்
* சிற்பி (சென்ற இடத்தில் எல்லாம் தமிழன் கோவில் கட்டியுள்ளான்)
* இரும்பு,செம்பு என கப்பல் கட்ட தேவையான கொல்லர்கள்
* கப்பல் மாலுமி
* கப்பலை செலுத்துபவர்கள்

கடலோடி தமிழன் என்ன தான் மேலே சொன்ன அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பணி ஆற்றி இருந்தாலும், இவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகத் தான் 'பள்ளர்/மள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான் என்பதையும், தான் சென்ற இடங்களுக்கெல்லாம் இள வட்டக்கல்லையும், நெல் கதிரையும் கொண்டு சென்று இறங்கியுள்ளான் என்பதையும் நாம் வரலாறின் மூலம் அறிகிறோம். எனவே 'பள்ளர்/மள்ளர்' என்பது ஒரு திணையில் (அ) திணை மயக்கத்தில், வாழ்ந்த, ஒரு இன மக்களை குறிக்கும் வார்த்தை என்பதையும், மருத நிலத்தில் வாழும் அனைத்து தொழில் சார் மக்களையுமே அது சுட்டும் என்பதையும் அறியலாம். மேலும், மூவேந்தர்கள் சுட்டி காட்டும் 'பள்ளர்' உட்பட, இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கும் 'பள்ளர்' சாதி ஆட்கள் அனைவரும் மருந்த நில வேளாண் சார் தலை குடி மக்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

மக்கள் குடிக்கணக்கில் மாற்றம்
பாண்டிச்சேரி(1970-72) உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர் என்று வாழ்ந்து வந்த மக்கள் பலர், தற்போது வன்னியர் என்றும், நாடார் என்றும், கொங்கு வேளாளர் என்றும் வாழ்ந்து வருகின்றனர் (கள ஆய்வு தகவல்: ஒரிசா பாலு) என்பதும், 'SC என்றால் எல்லாரும் ஒன்று தானே' என்று பறையர் என்று சான்றிதழ் பெற்று பள்ளர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வரும் உண்மை ஆகும்.

எனவே 'உலகில் இருக்கும் பள்ளர்' என்பதை சாதியம் என்று கொள்ளாமல், இனத்தின் அடையாளமாக கொள்ளவும். அந்த பெருமைகளில்,தொழில் சார் நுட்பங்களில், மேலே சொல்லப்பட்ட அனைத்து மருத நில மக்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், சென்னை --

யார் தலித்?

     பொதுவாக 'தலித்' என்றால் 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்றும், SC பட்டியலில் இருப்பவர்கள் என்றும் அர்த்தம் கர்ப்பிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சூத்திரர்களும், சண்டாளர்களும்/பஞ்சமர்களும் தலித்துகலாம். மனு சாத்திர படி 'சூத்திரர்கள்' ஒடுக்கப்பட்டவர்கள் தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் 'சூத்திரர்கள்' மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களா...?

    அதற்க்கு முன்பு, 'தலித்' என்பது ஒரு வர்க்கம் என்றும், அது சாதியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எப்படி 'தலித்' என்ற வர்க்கம், குறிப்பாக ஒரு சில சாதிகளை மட்டுமே குறிக்கும் குறியீடாக யாரால் ஆக்கப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது 'மனு' அடிப்படையில் 'ஒடுக்கப்பட்டோர்' யார் யார் என்று பார்ப்போம். இந்த ஆய்வின் முடிவில் சூத்திரர்கள் மட்டும் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், 'தலித்'துகள்  என்றும் சொல்லப்படுவது சரி தானா என்பதையும் அலசுவோம்.

* மனு சாத்திர படி 'பிராமண பெண்களும்' தலித்கள் தான். அதாவது ஒடுக்கப்பட்டவர்கள்(oppressed).
"Code of Manu states, "In childhood a female must be subject to her father,in youth to her husband, then to her sons; a woman must never be independent.There is no God on earth for a woman than her husband.....She must on the death of her husband allow herself to be burnt alive on the same funeral pyre. That everyone will praise her virtue""

(Referrence:
http://thathachariyar.blogspot.in/2010/11/33.html
http://dalitnation.wordpress.com/2007/12/14/why-babasaheb-married-a-brahmin/)

* மனு சாத்திரப்படி சத்ரிய,வைசியர்களும் ஒடுக்கப்பட்டவர்களே.

=> நூறு வயதான ஒரு சத்ரியன், பத்து வயது பிராமணனை தந்தை போல நடத்த வேண்டும்
"A hundred year old Kshatriya must treat a ten year old Brahmin boy as his father. (Manu 11-135)"

=> ஒரு பிராமணன் மற்ற வர்ணத்தை சேர்ந்த எவரையும் சாப்பிட அழைக்க கூடாது. பிராமணன் தான் உண்ட மிச்சத்தை அவர்களுக்கு தரலாம். அப்படி இருக்கும் மிச்ச மீதி உணம்வையும் தன கையால் பிராமணன் தர கூடாது. வீட்டிற்கு வெளியே இருக்கும் மற்ற வர்ண ஆட்களின் மூலம் தான் அதை செய்ய வேண்டும்.
"The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu II2)"

இதில் இருந்து பார்ப்பனர்கள் அல்லாத அனைவருமே பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், சூத்திரரர்கள் மட்டும் அல்ல சத்ரியர்களும்,வைசியர்களும் தான் 'தலித்'(ஒடுக்கப்பட்டோர்) என்பதும் மனு கூறும் உண்மை ஆகும்.  இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட படி நிலையில் இரண்டாவது நிலையில் இருப்பவன்(சத்ரியன்) தனக்கு கீழ் படிநிலையில் இருப்பவனை ஒடுக்குவது அபத்தம் அல்லவா? உண்மையில் 2,3,4 என அனைவரும் சேர்ந்து தானே உங்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தும் 'பிராமணரை' எதிர்க்க வேண்டும்? எனவே, சூத்திர தலித்துகளோடு, வைசிய தலித்துகளும், சத்ரிய தலித்துகளும் ஒன்று இனைந்து பார்ப்பனர்களை எதிர்ப்போம் வாருங்கள்.

(குறிப்பு: ஆரியம், திராவிடம், தலித்தியம் --- இவை மூன்றுமே எதிரி போட்டு கொடுத்த பாதை. என்றைக்குமே முடிவை தராத, ஒர்மையை ஏற்ப்படுத்தாத பாதைகள் இவை. இந்த உண்மையை புரிந்து கொள்வோம். தமிழன் என்ற ஓர்மையில் திரள்வோம்)

-- ம.பொன்ராஜ் காலாடி --