Tuesday, April 16, 2013

சிந்து சமவெளி நாகரிகத்தில் முருகன்

கீழ்க்காணும் படத்தில் இருப்பது சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் (அதாவது 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த) நாணயம்.





சற்று உற்றுப் பாருங்கள், நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.. வேல் கொண்டு போராடிய மறத் தமிழனின் ஏறு போன்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட தோற்றத்தை... அருகில் சேவலுடன் நிற்கிறார் அழகர். ஆம், முருகப் பெருமான்..

தகவல்:
தமிழர் மருதவேல் மூப்பர்


Monday, April 15, 2013

கடல் கொண்ட தென்னாடு என்ற குமரி’க்கண்ட ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய தேவைகளும் புதிய கோணங்களும்


சிவ பாலசுப்ரமணி (கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு) அவர்களால் தென்மொழி இதழ் மார்ச்சு2012 இல் வெளிவந்த கட்டுரை

============================================
உலக அறிஞர்கள் கூறுகிற ‘இலெமூரியா’க் கண்டத்துடன் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல் கொள்ள அழிந்த நிலங்களை தொடர்புபடுத்தி, 1885இலேயே சி.டி.மெக்ளின், இலெமூரியா தென்னிந்தியாவாகிய தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே நீதிபதி நல்லசாமி அவர்கள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடலில் மூழ்கிய பகுதிகளும் தான் இலெமூரியா என்று குறிப்பிடப்படுகிறது என்று 1898இல் உறுதிப்படுத்தினார்.

அவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கக்கால உறுப்பினராவார்.

ஆங்கில அரசின் அறமன்ற நடுவராகப் பணியாற்றிய நல்லுசாமி அவர்கள், போப், மாக்சுமுல்லர் இவர்களுடன் நல்லதொடர்பில் இருந்தவர். போப் ஐயர், ‘என் கல்லறையின்மேல் ஒரு தமிழ் மாணவர் உறங்கிறார்’ என்று எழுதுங்கள் என்று எழுதியமடல் நல்லுசாமி அவர்களுக்கே. சைவ சித்தாந்தம், Divine Light என்று இருமொழிகளிலும் சிவனிய இதழ்களை நடத்தி வந்தார்.

மடகாசுக்கர், ஆசுத்திரேலியா, தென்னிந்தியாவாகிய தமிழ்நாடு ஆகிய நிலப்பரப்புத் தன்மைகளின் ஒற்றுமை, இவற்றில் படர்ந்திருக்கும் நிலத்திணைகள், வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் காட்டி இப் பகுதிகளை இணைத்த ஒரு பெருநிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது பின்பு மூழ்கியிருக்க வேண்டும் என்ற கருதுகோள் உருவானது.

லெமூர் என்ற தேவாங்கு வாழும் மடகஸ்கார் மட்டும் அதன் படிமங்கள் கிடைத்த ஊட்டி மலைத்தொடர் மற்றும் புதிய பப்புவான் கினியா போன்ற இடங்களை ஒன்று இணைத்து மறைந்த ஆவி என்ற பொருளில் லெமுரிய என்ற பெயர் வந்தது

ஆனால் அண்மையில் நாட்டார் வழக்கியலில் லெமூர் என்கின்ற தேவாங்கை தமிழர் கடல் சார் பயணத்தில் மேற்கு திசையை காட்ட பயன் படுத்தினார் என்ற சொல்லும் நம்மை சிந்திக்க வைக்கிறேது

1912இல் செருமானிய அறிஞர் வெக்னர் உருவாக்கிய கண்டப் பெயர்ச்சிக்கோட்பாடு வந்தபின், இந்தியா என்ற நிலப்பரப்பே மடகாசுக்கர் பகுதியிலிருந்து பிரிந்து இப்போது ஆசியாவோடு இணைந்து மோதி இமயமலையை உருவாக்கியிருக்கிறது என்ற கருதுகோள் உருவானது.

இது நிகழ்ந்து பலகோடியாண்டுகள் ஆகிறபடியாலும் மாந்தன் தோன்றியது மிகவும் பிற்காலம் ஆனபடியாலும் கழக இலக்கியங்களின் காலம் அதனினும் மிகவும் பிற்காலமானதால் இதற்கும் தமிழிலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்ட கருத்திற்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

லெமுரியா அல்லது குமரிக்கண்டம் , குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்று எழுதிய அப்பாத்துரையாரின் கருத்துப்படியும், கால்டுவெல் மொழிஆய்வின்படியும் அதன்வழி தேவநேயப்பாவாணரின் மொழி அகழ்வாய்வின்வழியும் உருவான குமரிக்கண்டக் கொள்கையும் மாந்தன் தோற்றம் பரவல் கொள்கையும்
தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்டமும் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் அடங்கியதல்ல.

எலனா பிளவாத்ஸ்கி ஆரம்பித்து வைத்த லெமுரியா தொடர்ச்சி சுப்பிரமணியன் சாஸ்திரி அவர்களால் வரைபடம் போட பட்டு நம்பகத்தன்மையை இழந்தது

மேற்கூறிய குமரிக்கண்டம் இருந்திருப்பதற்கான சான்றுகள் எவையும் நிலவியல் சான்றுகளுடன் நிறுவப்படவில்லை.

1959-1964 இல் நடந்த இந்திய மாகடல் கடலாய்வின்வழி கண்டறிந்த மூழ்கிய அல்லது மேல்தெரிகின்ற மலைத்தொடர்களும் தொடர்ச்சியான தீவுகளும் ஒரு நிலப்பரப்பு விட்டு விட்டு தீவுகளாய் இருந்திருப்பதற்கான சான்றுகளாக இருப்பதால் கடலில் ஒரு நிலப்பரப்பு மூழ்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

இப்போது எங்களுடைய கடலாய்வு நேரடியாகக் கடலில் களஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை கடல் கொண்ட தென்னாட்டின் ஆய்விற்கான எந்தக் கள ஆய்வும் எந்த அரசாலும் தொடர்ந்து மேற்கொள்ளப் படவில்லை.

குறைந்த அளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள பட்டன .

எனினும் எங்களுடைய சில ஆய்வுகளிலேயே பல செய்திகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்த ஆய்வின்படி இதுவரை உலகில் அதிக மீன்வளம் மிக்கப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆழம் குறைந்த கடல்பகுதிகளாகவே உள்ளன. அவற்றில் இந்தியப் பெருங்கடலில் ஆழம் குறைந்த பரப்புகள் கொண்ட பகுதிகள் ஆங்காங்கு நிறைய பகுதிகள் உள்ளன. குமரிக்கு நேர்கீழ் சற்றுத்தொலைவிலேயே 4500 சதுர மைல் கல் உள்ள பெரும்பரப்பு ஒரு சீரானதாக இல்லையெனினும் 140 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

அடுத்து மீன்வளம் நிறைந்த பகுதியாக உள்ள பகுதிகளின் புள்ளி விளக்கப்படி அவை மாந்தன் வாழ்ந்து மூழ்கிய இடிபாடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இவைதாம் மீன்கள் குஞ்சுபொரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் எனவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பகுதிகள் எனவும் ஆய்வுலகம் குறிப்பிடுகிறது.

குமரிக்கடலில் பெரும்பகுதி இவ்வாறு இடிபாடுகள் நிறைந்த தரைப்பகுதிகளாக இருப்பது நம் களஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் அப்பகுதி மீன்வளத்தில் சிறந்த பகுதியாக உள்ளது என்பதும் தெரியவந்தது. 55 கி.மீ. தொலைவில் அதுபோன்ற தீவுகளும் ஆழங்குறைந்த திட்டுகளும் இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இலக்கத்தீவுப் பகுதியிலிருந்து மடகாசுகர் பகுதிக்கு இடையில் தொடர்ச்சியான தீவுகள் ஏராளமாக இருப்பது தெரியவருகிறது.

மலையுச்சிகளும், கண்டங்களும் மடகாசுகர் பகுதியைச் சுற்றி ஏராளமாக உள்ளன.

அவை தென்னிந்தியாவை நோக்கி உள்ளன. நம் நாட்டில் உள்ள சக்கரைவள்ளிக்கிழங்கு கீழைத் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அவை ‘குமரா’ என்று அழைக்கப்படுகிறது.

அது தமிழ்ப் பெயர் என்றே கருதப்படுகிறது. அந்த வள்ளிக்கிழங்கு கடலில் மிதந்தோ, அடித்துக்கொண்டோ போய் அத் தீவுகளில் தானாகப் பயிர் தோன்றியிருக்க முடியாது. அவற்றை நட்டு வளர்த்துத்தான் பயிர் செய்திருக்க முடியும். எனவே இவை கடற்செலவால் மட்டுமே பரவலாகச் சென்று பயிர்செய்திருக்கக் கூடும்.

கடற்செலவில் வள்ளிக்கிழங்குக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. அந்நாளில் கடற்செலவு உணவுக்கு மிகவும் ஏற்றது. கடற்செலவின்போது 6 மாதத்திற்குக் கெடாமல் கப்பலில் வைத்துக் காத்துக் கொள்ளமுடியும். இது கீழைத் தீவுகளிலிருந்து பசுபிக்கு கடலில் தென்அமெரிக்கா வரையுள்ள தீவுகளில் நிரம்பக் காணப்படுகிறது. பாய்மரக்கப்பலுக்கு முன்பே பலவகையில் நீரோட்டத்தை நம்பிக் கடல் செலவு செய்துள்ளனர் என்பது நம் ஆய்வில் தெரியவருகிறது. அதற்குரிய மிதவை, தெப்பம், ஓடம், தோணி, படகு, கட்டுமரம் என்று பலபெயர்களில் செலவுப் பொருள்கள் இருந்துள்ளன. ஒரியா, பர்மா, கடாரம், அந்தமான் போன்ற கரையோர ஊர்களில் இப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன் ஊர்ப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக வழங்குகின்றன.
உலகின் 8,50,000 கி.மீ. கடற்கரையில் 3,50,000 கி.மீ. கடற்கரை மாந்தனின் கையகத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் தமிழர்களின் பதிவுகள் இருப்பது தெரியவருகிறது.

இவை ஆமைகளின் வலசை இடங்களாக இருப்பதுதான் இதற்குக்காரணம். ஆமைகளின் போக்குகளையும், செங்கால்நாரையின் போக்குகளையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆமைகள் கடலின் நீரோட்டத்தின் துணைகொண்டே உலகை வலம் வந்தன. அந் நீரோட்டங்களை ஆமைவழியே தொடர்ந்து தமிழர்களும் நன்கு அறிந்திருந்தனர்.

தமிழர்களின் திருமணங்களில் ‘முளைப்பாரி’ கொண்டு போவது ஒரு சடங்காக இருக்கும். இது உழவுத் தொடர்பானது. தங்களுக்குப் பயிற்சி மிகுந்த பயிர்களை மணமகள் தான் வாழப்போகும் புதிய இடத்திற்குச் சீராகக் கொண்டு சென்று அங்குப் பயிர்செய்வது என்ற வழக்கத்தின் தொடர்ச்சியே இந்த ‘முளைப்பாரி’ திருமணச்சடங்கு. உலகின் கடற்கரையோர குடியேற்ற மக்களிடமும் இந்த வழக்கம் பரவலாக உள்ளது.

இது தமிழர்களின் பரவல் முறையைப் பின்பற்றியதாகும்.
பெரியஅளவில் எந்த அரசும் ஆர்வம் காண்பிக்காத நிலையிலேயே கடல் கொண்ட தென்னாடு தொடர்பான ஆய்வு இருந்தது.

இது தொடங்கினால் அது தமிழர்களின் பண்டை வாழ்வை தொல்வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக முடியும் என்பதாகவே இந்த ஆய்வு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இலக்கியத்தில் உள்ள கடல்கோள்கள், கண்டம் மூழ்குதல் என்ற செய்திகளெல்லாம் சிறிது காலத்திற்குமுன்வரை மிகைப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டது.

அவற்றில் உண்மை இல்லையென்றும் பழம்பெருமை பேசுவதாகும் என்றே புறந்தள்ளப்பட்டிருந்தது.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இதுபற்றி ஆய்வுகள் மீண்டும் புத்தாக்கம் பெற்றன. ஆழிப்பேரலை, எரிதிரை என்றெல்லாம் பெயர் மீட்டெடுத்து அதன் ஆய்வின் தேவையை ஆய்வுலகம் எடுத்துக்கொண்டது. மீண்டும் ஆழிப்பேரலை தோன்றுமா அது எத்தன்மையில் தோன்றும். இந்தியப் பெருங்கடலின் தன்மை என்ன? அக்கடலின் அடிப்பரப்பு எவ்வாறுள்ளது. இதுவரை கடல்கோள்கள் நடந்த்தா?

கடல்பின் வாங்கியதா?

114 கிலோ மீட்டர் வரை பல வேறு காலத்தில் கடல் உள்நுழைந்துள்ளதன் வரலாறு என்ன?
அரியலூர், குடியம், மானாமதுரை, பனக்குடி போன்று நடுநாட்டிலும் கடல் வந்து போனதற்கான சான்றுகள் உள்ளனவா என்பவற்றைத் தெரிந்துகொள்வது அதன் ஆய்விற்கு வழிவகுத்தது.

குமரி கண்ட ஆய்வின் தேவை இவ்வாறாக விரிவுபெற்றுள்ளது.

உலக நாகரிகத்தில் தமிழர் பரவல் தமிழ்மொழிப் பரவல் இவ்வாறு பலதுறை ஆய்வுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தின் 17 இலக்கம் ஆண்டுகட்குமுன் மாந்தன் நெருக்கமாக வாழ்ந்திருந்தது இன்று சாந்திபாப்பு போன்ற ஆய்வாளர்கள்வழி பழங்கற்கால ஆய்வுகள் உலகிற்கு எட்டியுள்ளது. உலகின் முகாமையான ஆய்விதழ்கள் அதை நுட்பமாக ஆராய்ந்து உறுதிசெய்து வெளியிடுகின்றன.

தென் கிழக்கு ஆசியாவில் அன்றைய மதராசில் பல்லாவரம் பகுதிகளிள் முதல் முதலாக கல்கோடாரிகள் எடுத்த சார் ராபர்ட் ப்ருசே பூட் மற்றும் கிங் அவர்களின் கடுமையான கள ஆய்வுகள் , உலக நாகரிகத்தில் நம்முடிய கற் கால மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த பகுதிகளை அவர்கள் பயன படுத்திய கல் ஆயுதங்கள் இருந்த இடத்திற்கு மெட்ராஸ் கற் கால் மனிதர்களின் நாகரிகம் என்று பெயரிட்டது , பெரும்பானமையான் தமிழர்களுக்கு தெரியாது

நம் தொன்மையை முழுமையாய் வெளி படுத்த இன்னும் முறைப்படுத்தப்பட்ட கடல் ஆய்வுகள் முழமையாக தொடங்க வில்லை.

மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பழம் ஆய்வுகள், நிலத்திணை ஆய்வுகள் இன்று யாரும் தொடாமல் உள்ளது. ஒவ்வொரு நிலத்திணையையும் தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தி வாழ்முறைக்குத் தக உருவாக்கியுள்ளார்கள் என்பதை உலகமே வியக்கிறது.

தென்னை, பனை, மா, பலா, முந்திரி ஆகியவற்றை இத்தனை வகையில் முழுவதுமாக பயன்படுத்த முடியுமா என்று வியக்கும் வகையில் இவர்கள் தங்கள் வாழ்முறையில் பயன்படுத்துகின்றனர்.
மீன்பிடிமக்கள், பாய்மரத்தைப் பயன்படுத்திய கடலோடி மக்களின் பலதொழில்நுட்பங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

பறவைச் சிறகுகளின் தொழில்நுட்பத்தைக் கண்டு அதையப்பக் கப்பல்களில் பாய்மரங்களை அமைத்தவர்கள் தமிழர்களே. பாய்மரத்துணியை பருத்தியிலிருந்து நெய்து புளியங்கொட்டையும் பிற மாவுகளையும் கலந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை இன்றளவும் செய்துவரும் ‘வாதிரி’ என்றழைக்கப்படும் தமிழ்ப்பிரிவினர் இன்றும் வாழ்கிறார்கள்.

விசைப்படகுகள், நீராவிக்கப்பல்கள் வந்தபின் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிவியல் படுத்தப்படாமலேயே மறைந்துவிட்டன.

கீழைக்கடல் முழுவதும் கடல் மேலாண்மை செய்துள்ளதைத் தமிழ் மக்களே இன்றைக்கு நம்பவில்லை. கடாரம் கொண்டான் என்றால் அதுவெறும் பெருமை என்றே நம்ப மறுக்கிறார்கள்.
தமிழரின் மரபு விளையாட்டுகளான சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு, தாயம், பல்லாங்குழி போன்றவை உலக கடலோர ஊர்களில் இன்றும் நிலவுகின்றன.

உலகம் சுற்றிய தமிழக கடலோடி மீனவ மக்கள் இன்றைக்கும் கடற்கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள் .

அவர்களில் பலர் உலக எல்லைக் கடவு வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெறும் பாய்மரக்கப்பலில் அந்தமான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று வலம் வருவதைப் பெரியதாகக் கருதுவதேயில்லை. மிக எளிமையாக அதன் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர்.

ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு மடகாசுக்கர் வழியாகத்தான் முதலில் தென்னிந்தியாவை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு கட்டலான் என்ற பழங்குடிமக்களின் வரைபடம் துணையாக இருந்தது. ‘கட்டலான்’ என்ற இனமே கடலான் என்னும் தமிழ்ப்பெயர் கொண்ட தமிழ்சார் குடியேற்ற மக்களே என்பது அடுத்த ஆய்வு. தமிழ்நாட்டின் பழங்கல்வெட்டான மாங்குளம் கல்வெட்டில் ‘கடலன்வழுதி’ என்ற பாண்டிய மன்னனின் பெயர் இடம்பெற்றுள்ளது காணலாம்.
சுறாவேட்டை, முத்துக்குளித்தல், சங்குகுளித்தல், சிப்பியெடுத்தல் போன்ற தொழில்களின் மக்கள் இங்கு தமிழரிடை அழியா இனமாகத் தங்கள் அடையாளத் தொழிலிலேயே ஈடுபட்டுத் தனித்து வாழ்ந்துவருவதுபோல் பிலிப்பைன்சு, சீனா, சப்பான் நாடுகளின் கரையோரங்களில் பெரும்பான்மை மக்களின் தொடர்பில் இல்லாமல் இந்தத் தொழிலோடு வாழ்ந்து வருகின்றனர். ‘முத்து’ என்ற சொல்கூட அங்கு வழக்கில் உள்ளது.

தென்அமெரிக்கா முதல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு இடைப்பட்ட கீழைநாடுகளின் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்று வில்லியம் மார்சுடன் (William Marsden) குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் கடல் மட்டம் குறைந்த கடற்பரப்பிலேயே அதைத் தொடர்ந்து வந்தனர். மடகாசுக்கர்க்கும் தமிழகத்திற்கும் இடையில் ஆயிரக்கணக்கான தீவுகளும் கடல் ஆழம் குறைந்த திட்டுகளுமே இவர்களின் வருகைக்குத் துணைபுரிந்தது.

இவர்களில் வரவுகாலத்தில் கி.பி. 1350இல் கடலூழி தோன்றியிருந்ததால் கடல்மட்டம் சற்று
குறைந்து இருந்தது இவர்களின் வருகையின் போது அவர்களின் கவனத்தை ஈர்த்தது .

ஐரோப்பிய மக்களின் கடற்செலவு வரலாறு சென்னைப் பல்கலைக்கழக பழைய நூலகத்திலும் இலண்டன் நூலகத்திலும் 300க்கும் மேற்பட்ட நூல்களில் குறிப்புகளாகக் கிடைக்கின்றன.

எனவே கடல் கொண்ட தென்னாட்டின் மூழ்கிய நிலங்கள் தொடர்பான ஆய்வின் தேவைகள் புதிய கோணங்களில் தோன்றி பழைய வரலாறு என்ற நிலையிலிருந்து நிலப்பாதுகாப்பு என்ற வகையில் விரிந்துள்ளன.

அதன்வழி கடல் கொண்ட தென்னாடு வரலாறும் மூழ்காமல் மீட்டெடுக்க ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கள ஆய்வும் இவ்வழியில் வெற்றியுடன் எளிதே தொடர்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
============================================

கொரியாவில் பாண்டியனின் மீன் சின்னம்

பாண்டியர்களின் கோயில்களில் உள்ள மீன் குறியீடுகள் ,கொரியா கொடி சின்னம் ஒப்பிட்டு செய்க . கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தமிழ் நில மண்ணில் ,கொரியா மண்ணில் உள்ள திணை கோட்பாடுகளை அவர்களின் நிலம் அதன் பொழுதை அங்கு கலந்துள்ள கடலன் என்று என்ற பாண்டியர்களின் பண்பாடுகளை ஒப்பிட்டு தேடுகின்ற என் போன்றவருக்கு வியப்பை தருகின்றன . -- கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு


 

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!!!


கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.

இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது

உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில
் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?


ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டேதான் இருப்பான்.


-- லோகேசுவர பாண்டியன் தேவேந்திர குடும்பன் --

Tuesday, April 2, 2013

மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு

இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.


இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்


இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.



ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.

இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.

இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.






ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf



எமது கருத்துக்கள்:
* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.

* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை 'களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று  கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.

* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.

* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.

* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் 'சத்ரியர்' என்று நட்பு பாராட்டும் ஒரு சில 'வன்னியரின்' நிலை கேள்வி குறியாகும்.

* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே  சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.

* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் 'வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்' போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.

* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.