Tuesday, March 26, 2013

கோவில்பட்டி சிலை உடைப்பு: திடுக்கிடும் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மெயின் ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் கிரில் பதித்துள்ள சுவரை சுத்தியலால் உடைத்து கேட்டை கழற்றி உள்ளே புகுந்து தேவர் சிலையை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இன்று காலை சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல்

இதன் பின்னணியை சற்று அலசுவோம்.

* உடைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த சிலை இருக்கும் இடம் மறவர்கள் அதிகம் வாழும் இடம். இரும்பு கதவு போடப்பட்டு மிகவும் பாதுகாப்பாக உள்ளது சிலை. எனவே சிலையை சேதப்படுத்தியவர்கள் மாற்று சாதி ஆட்களாக இருக்க வாய்ப்பு குறைவு.

* அந்த சிலையானது மண்ணால் செய்யப்பட பழைய சிலை. அதை அகற்றிவிட்டு வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கனவு.

* ஈழத்திற்காக மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கும் இந்நேரம், அதை திசை திருப்ப, கயவர்கள் கட்டவிழ்த்து உள்ள சதி வேலை இது என்று என்ன வேண்டியுள்ளது. இதற்க்கு அப்பாவி மறவர்கள் அவர்களின் வலையில் வீழ்ந்து  பலியாவது தான் பரிதாபம்.

* அப்படியானால் சிலையை உடைத்தது யார்..? வேறு யாரும் அல்ல. அந்த பகுதியை சேர்ந்த இரண்டு மறவர்கள் தான். சம்பந்த பட்ட இடத்தில் இருக்கும் எந்த சாதி ஆட்களையும் (மறவர்கள் உட்பட) தொடர்பு கொண்டு கேட்டால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம். இது உளவுத்துறை வாயிலாக தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்ட செய்தி. அப்படி என்றால் அந்த இரண்டு மறவர்கள் யார்? எங்கே அவர்கள்?

* அவர்கள் பற்றிய தகவலை இது வரை தமிழக அரசு வெளியிட வில்லை. இன்னும் சொல்லப்போனால், சிலை உடைப்பு சம்பந்தமாக இது வரை (மாற்று சாதியினர் உட்பட) யாரும் கைது செய்யப்பட வில்லை. தொடர்ந்து எழுந்த கலவரம் காரணமாகவே மாற்று சாதியினர் சிலரை காவல்துறை கைது செய்துள்ளது.அவ்வளவே...!!! சிலை உடைத்ததாக சொல்லப்படும் அந்த மறவர்கள் தற்போது உயிரோடு இல்லை.

* அதில் ஒருவர் விஷம் குடித்தும், மற்றொருவர் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் அரசியலாக்க முயன்ற தமிழர் விரோத சக்திகளின்,கட்சிகளின் கைகூலியாய் செயல்படும் சில மறவர்கள், கடை அடைப்பு, சாலை மறியல், கடை உடைப்பு என்ற வன்முறை செயல்களில் இறங்கியுள்ளனர்.

* நாடார்,நாயக்கர் சாதி மக்கள் வணிகம் செய்யும் கோவில்பட்டியின் ஒரு பகுதியில் தனது அராஜக கடை அடைப்பை நடத்திய மறவர் வன்முறை கும்பல், பள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி வற்புறித்திய போது, அவர்கள் எதிர்த்ததால் திரும்பி விட்டனர். இருப்பினும் மேலும் எந்த அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, அவர்களை கைது செய்தது காவல்துறை.

* மறவருக்கும், பள்ளருக்குமான பல காலத்திய வன்மம் இற்றுப்போய் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இங்கொன்றும் அங்கொன்றுமாய் 1950 தொடங்கி ஒரு சில திராவிட கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சாதி மோதல்கள் தொடர்கின்றன. இதை இரு தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே இரு தரப்பு மக்கள் சார்பாகவும் தமிழக அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கை இது தான். 'சிலை உடைப்பு' என்ற போர்வையில், ஈழ ஆதரவு போராட்டங்களை திசை திருப்ப, சில விசமிகள் செயலாற்றி வருகிறனர். இதை உடனடியாக தடுத்து திருத்தவும், இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாமலும் தடுக்கவும் வேண்டுகிறோம்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 2012 ஆம் ஆண்டு நினைவேந்தல்.


* தியாகி இம்மானுவேல் சேகரன் தேவேந்திரனார் அவர்களின் நினைவஞ்சலியில் ஈழ தமிழர் தலைவர் திரு.சிவாஜி லிங்கம் அவர்கள்.

"...உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு இம்மானுவேல் சேகரனாரின் நினைவஞ்சலிக்கு அணி அணியாய் வரும் மக்கள் கூட்டம்  எனக்கு வியப்பளிக்கிறது...." --- திரு.சிவாஜிலிங்கம்.



* கோ.க மணி, சட்ட மன்ற உறுப்பினர், ப.ம.க காணொளி கூறியவை
"...இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 55வது நினைவேந்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்களின் சார்பில், மருத்துவர் அய்யா அவர்களின் சார்பில், மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தியுள்ளோம்.தென் தமிழ் நாட்டில், பறந்து விரிந்து வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் மக்கள், இந்த நினைவு நாளை முழுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.1989 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் இந்த நினைவிடத்தை பராமரிக்க முதல் கட்ட நிதியாக சுமார் 11 லட்சத்தை கொடுத்தார்கள். மறுத்தவர் அய்யா அவர்கள் அவ்வப்போதும், நான் ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் சார்பில் இங்கே வருகிறோம்..."



நினைவேந்தலில் கலந்துகொண்ட  பிற தமிழக முக்கியஸ்தர்கள்
> செந்தமிழன்  சீமான் –  நாம்  தமிழர்  கட்சி
> விடுதலைச்சிறுத்தைகள்  கட்சி
> பகுஜன்  சமாஜ்  கட்சி –  சிவகங்கை  மாவட்டம்
> திரு.  முருகவேல்  இராஜன்,  மக்கள்  விடுதலை  கட்சி
> திருமதி  பவானி  இராஜேந்திரன், முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர், திமுக.
> சுப. தங்கவேலன்,  முன்னாள்  அமைச்சர்,திமுக
> தங்கவேல்,  நாடாளுமன்ற  உறுப்பினர்
> திருமதி  தமிழரசி,  முன்னாள்  அமைச்சர்
> திராவிடர்  கழகம்
> திரு. ம.பா. பாண்டியராசன்,  தே.மு.தி.க.,  சட்ட பேரவை  உறுப்பினர்
> திரு.  அதியமான்,  ஆதித்தமிழர்  பேரவை
> நாயுடு  மகாஜன  சங்கம்
> செல்லூர் கே. ராசு,   கூட்டுறவு  துறை  அமைச்சர்
> டாக்டர்  சுந்தரராஜன்,  ஆதிதிராவிடர்  நலத்துறை
> ராம்பிரபு,  காங்கிரஸ்

நினைவேந்தலில் கலந்துகொண்ட  இந்திய முக்கியஸ்தர்கள்
> ராம்விலாஸ் பஸ்வான்
> பகுஜன் சமாஜ் கட்சி



பஞ்சாப்பில் சிலை திறப்பு
    நினைவேந்தல் நிகழ்வின் தொடர்ச்சியாக, தியாகி. இம்மானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலை பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநில மக்களால் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.



பார்போற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகழ் எல்லை கடந்து இந்திய மக்கள் பலரிடம் பரவியுள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

Monday, March 25, 2013

பதில் சொல்லுங்கள் ராமதாஸ் அய்யா....!!!

    சுமார் 18 வருடங்களுக்கு முன்பு 'குருசாமி சித்தரால்' தொடங்கப்பட்ட, 'மள்ளர் மலரில்' வந்த பதிவுகள் இவை. இருப்பினும் திரு.ராமதாஸ் அவர்கள் 'தேவேந்திரர்களின்' கேள்விக்கு அவர் பதில் சொன்னதாக தெரியவில்லை. குறிப்பாக போலி சான்றிதழ் கொடுத்ததாக வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுக்கு இன்னும் அவர் மவுனம் சாதிப்பது ஏன்? சம்பந்த பட்டவர்கள் பதில் சொல்வார்களா...?













இவை தவிர, திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவேந்தலுக்கு உறுதுணையாய் இருந்தவர் என்பதும், அவரை எந்த தருணத்திலும் நம்ப வேண்டாம் என்றும் முக்குல பிரதிநிதி திரு.முருகன் ஜி அவர்கள் கொந்தளித்ததும் நடந்துள்ளது.




தற்போது தலித் அல்லாதோர் கூட்டமைப்பில் பங்கு பெற்று இருந்தாலும், அதிலும் திரு.ராமதாஸ் அவர்கள் தன்னை முன்னிறுத்தி ஆதாயம் தேட நினைப்பதாக திரு.பொங்கலூர் மணிகண்டன் அவர்களின் சீற்றத்தையும், பிரபல நாளேடு பதிவு செய்துள்ளது.

"அகிலேஷ் வருகையை தடுக்க ராமதாஸ் சதி"
நாமக்கல்: நாமக்கலில் மே மாதம் நடைபெற உள்ள கொங்கு பேரவை மாநாட்டுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வருவதை தடுக்க பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சதி செய்வதாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் மாநாடு நாமக்கலில் மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் கொங்கு மண்ணின் பண்பாடு,காலா ச்சாரம்,பாரம்பரியப் பெருமைகளை பாதுகாப்பதும்,இளைய சமுதாயத்திற்கு அதைக் கொண்டு செல்வதும் ,அதற்கு கொங்கு இன மக்களை அரசியல் பாராமல் ஒன்றுபடுத்துவது வதுமாகும்.

மேலும் கொங்கு நாட்டில் அமைதியோடும்,அரவணைப்போடும் வாழ்ந்து பிற எல்லா சமுதாய மக்களையும் பிரிக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,பி.சி.ஆர்.சட்டம்,மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் நிலங்களைப் பாதுகாப்பது,கொங்கு நாட்டு குல தெய்வக் கோவில்களை அரசுடமையாக்க கூடாது,நாடாளுமன்ற,சட்டமன்ற,உள்ளாட்சி மன்ற ரிசர்வு தொகுதி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்து இம்மாநாடு நடக்கிறது.


இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்,சமாஜ்வாடி கட்சி தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர்களை சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம்  லக்னோவில் நேரில் சந்தித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முலாயம் சிங் யாதவ் மாநாட்டுக்கு முதல்வர் அகிலேஷ்யாதவை அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி அளித்தார். பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை நிர் வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வரும் நிலையில் கொங்கு மாநாட்டுக்கு அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளாமல் தடுக்கும் நோக்கத்தில் பா.ம.க. ஈடுபட்டு வருவது கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

வன்னியர் மாநாடு ஏப்ரல் 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடத்துவதை ஒட்டி அம்மாநாட்டில் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளுமாறு பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி லக்னோ சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் நடத்தி வரும் அனைத்து சமுதாயப் பேரவைக்கு முன்பாகவே பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் தலித் அல்லாதோர் பாதுகாப்புப் பேரவை  செயல்பட்டு வருவதோடு, குடும்ப பிரச்சனையான கலப்புத் திருமணம் உள்ளிட்ட பிரச்சனைகளை அரசியலாக்கக் கூடாது என்ற பொங்கலூர் மணிகண்டனின் கருத்துக்கு  நேர் மாறாக அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த ராமதாஸ் முனைவது எல்லா சமூக மக்களிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தரப்பில்,''டாக்டர் ராமதாஸ் அனைத்து சமுதாயத்தையும் பாதுகாப்பதாகக் கூறுவதே ஒரு ஏமாற்று வேலை.பொங்கலூர் மணிகண்டன் தலைமையிலான கொங்கு பேரவையினர் பிற்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காக உ.பி.முதல்வரை அழைத்து ஒரு மாநாடு நடத்துவதையே விரும்பாதவர், எப்படி எல்லாச் சமுதாயத்தையும் பாதுகாப்பார்.என்று தெரியவில்லை.
ராமதாசை நம்பி முன்பு  கொங்கு வேளாளர்,தேவர்,நாடார்,யாதவர், முதலியார்,   முத்தரையர்,நாயுடு, உள்ளிட்ட எல்லாச் சமுதாயத்தையும் ஏமாற்றியது போல இனி யாரும் ஏமாற மாட்டோம்.

கலப்புத் திருமணம் பாதிப்புகள்,வன்கொடுமை தடுப்புச் சட்டம்,பி.சி.ஆர்  சட்டம்,உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து வெளிப்படையாக போராடி வருவது பொங்கலூர், மணிகண்டன் தலைமையிலான கொங்கு பேரவை தான். ஆனால் ராமதாஸ் ''ஒரு தலித்தை முதல்வராக்குவேன்'' என்ற கோஷத்தோடு திருமாவளவனை தனது தம்பி என்று அழைத்து ஊர் ஊராக ஒன்றாக சேர்ந்து தேர்தலுக்காகவும்,பதவிக்காகவும்,அரசியல் நாடகமாடி விட்டு இப்போது திடீரென்று தலித் அல்லாத சமுதாய மக்களின் மீது  பாசம் காட்டுவதும் ஒரு அரசியல் நாடகமே. நாடகக் காதலை எதிர்ப்பதாக நாடகம் போடும் ராமதாசின் நாடக அரசியலை நம்பினால் மோசம் போவது அவரல்ல.எல்லாச் சமூகமும் தான்  என்பதை நாங்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளோம்.


1996 இல் கோவை செழியன்,ராமதாஸ்,வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஒரே அணியாக இருந்து ''சமூக நீதி ஊழல் ஒழிப்புக் கூட்டணி'' என்ற பெயரில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தனர்.திருசெங்கோட்டில் நாடாளுமன்ற வேட்பாளர் கூட்டணி சார்பில் கொங்கு பேரவை சேர்ந்தவரும்,எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளரும் போட்டியிட்டனர்.எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க வென்றது.ஆனால் வன்னியர் ஒரு ஓட்டு கூட நாடாளுமன்ற கொங்கு பேரவை வேட்பாளருக்கு போடவில்லை.இதுதான் கடந்த கால வரலாறு என்று  கொங்கு சமுதாயம் தெளிவான  கருத்து வெளியிடுகிறது என்று அவர்கள் கூறினர்.

சமாஜ்வாதி கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூறுகையில்,''ராமதாசின் ''வன்னியன் ஆளனும் '' என்ற கோஷம்  என்பதே சரியல்ல. பெரும்பான்மையினர் கொங்கு வேளாளர்,தேவர்,நாடார் ,முத்தரையர், யாதவர்,முதலியார்,உடையார் உட்பட பலர் இருக்கும் போது எல்லோரும் சேர்ந்து  ஆலனும் என்று சொல்லாமல்  வன்னியர் ஆளனும் என்பதே பெரியண்ணன் போக்கு தான்.எனவே ராமதாஸ் தலைமையில் வன்னியர் ஆள்வதை விட இப்போது ஆளும் அ.தி.மு.க.வே மேல்.

மொத்தத்தில் வன்னியர்களை வளைக்க வேஷம் போடும் ராமதாஸ் தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் வளைவார் என்பது உண்மை.இவரை நம்பி உ.பி.யிலிருந்து முதல்வர் வர விட மாட்டோம்.அதோடு பொங்கலூர் மணிகண்டன் தான் முதன் முதலில் தர்மபுரி சம்பவத்தை யொட்டி முலாயம் சிங் யாதவை அழைத்து வர வேண்டும் என்று குரல் கொடுத்து,முலாயம் மற்றும் அகிலேசை சந்தித்தார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டத்தால் மக்களிடையே ஏற்படும் பிளவைத் தடுக்க போராடுகிறார்.எனவே ராமதாசின் சுய நல அரசியல் நாடகத்தை முறியடித்து கொங்கு வேளாளர் மாநாட்டில் உ.பி.முதல்வர் பங்கேற்பார் என்பது உறுதி.

கொங்கு வேளாளர் மாநாட்டில் குழப்பம் விளைவித்து அகிலேஷ் யாதவை பங்கேற்காமல் செய்து  வன்னியர் மாநாட்டில் பங்கேற்கச் செய்வதன் மூலம்  எல்லாச் சமுதாயத்திற்கும் தானே தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தல் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மீது கொங்கு மண்டல மக்கள் கொதிப்படைந்து வருகிறார்கள் என்றனர்.




Saturday, March 23, 2013

திராவிடத்தால் வீழ்ந்தோம்: திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்;வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.


"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)


   இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு!


    தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்;
எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

சாதி குழப்பங்களும் தலித் மயக்கங்களும்


சுதந்தர இந்தியாவில் முதன்முறையாக இந்திய மக்கள் தொகையை சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று ஒவ்வொரு சாதியினரும் நம்புவதால் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகமான பள்ளர்களோ, தங்களை எந்தப் பிரிவில் (SC, BC, MBC, DNC) பதிவு செய்வது என்று புரியாமல் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் காலத்திலும், சுதந்தரத்துக்குப் பின்பும் இந்தியா முழுவதிலும் இருந்த சாதிகளை சமூகப் பொருளாதார அடிப்படையில் ‘முற்பட்ட சமூகத்தினர் (FC)’ என்றும் ‘பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினர்’ என்றும் பிரித்தனர். தீட்டுப்படும் தொழில்களைச் (மலம் அள்ளுதல், சாவு மேளம் அடித்தல், வெட்டியான் வேலை போன்றவை)செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்கள் ‘பட்டியல் சாதியினர் (SC)’ என்று அழைக்கப்பட்டு, அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்பச் சில சலுகைகளையும் வழங்கினார்கள்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும் (நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில் இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர்.  இதன்பிறகே தமிழ்நாட்டில் சாணார், பள்ளிகளை தவிர்த்த 76 சாதிகளை (பள்ளர், பறையர், சக்கிலியர், உள்ளிட்ட) பட்டியல் இனத்தில் சேர்த்தனர். அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC  பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1.         தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2.         கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3.         பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4.         மாட்டுக் கறியை உண்பவர்கள்
5.         பசுவை வணங்காதவர்கள்
6.         தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் SC  பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே புத்தகத்தில் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் பள்ளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக பள்ளர்களை மதுரைக்குத் தெற்கே குடும்பன் என்றும், திருச்சி கரூர் பகுதிகளில் மூப்பன் என்றும், கொங்கு பகுதியில் பண்ணாடி என்றும் பட்டக்காரர் என்றும் அழைப்பார்கள் என்று எழுதியுள்ளார். இவர்களுக்கு உதவியாக காலாடி என்றும் மண்ணாடி என்பவர்களும் இருந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசு வரையறை செய்தபடி பள்ளர்கள் தீண்டத்தகாதோர் என்று முடிவு செய்தால், எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளபடி குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் SC பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறில்லை? பட்டியலில் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
1.         குடும்பன் SC பட்டியல் (SC 35)
2.         மூப்பன் BC பட்டியல் (BC 65)
3.         காலாடி BC பட்டியல் (BC 35)
4.         காலாடி DNC பட்டியல் (DNC 28)
5.         மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.
குடும்பன் தீண்டத் தகாதவன். ஆனால், அவனுக்குப் படைவீரனாக இருந்த காலாடி (பாண்டிய படை மறவர்) மற்றும் குடும்பனின் உப தலைவர்களான மண்ணாடி, மூப்பன் ஆகியோர் BC பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இது எப்படி? மேலும், தீண்டாமையும், கோவில் நுழையாமையும் SC பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்றால், தமிழ்நாட்டில் சாணார்களே (நாடார்கள்) அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
குடும்பன் என்ற சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தால், இந்தியா முழுவதிலும் ஒரே பட்டியலில் (SC) அல்லவா அவர்கள் இருந்திருக்க வேண்டும்? மாறாக தமிழ்நாட்டில் SC பட்டியலிலும் மற்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினராக உயர்சாதிப் பட்டியலிலும் இருப்பது விநோதமாக இல்லையா?
தீண்டாமைக்கு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பள்ளர்கள் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இன்றுவரை வேளாண்மையே இவர்களுடைய தொழில். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, கோவை, பேரூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளர்கள் சார்ந்த பல விழாக்கள் இன்றும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக உள்நுழைந்தவர்கள் சாணார்களும் (நாடார்) பறையர்களுமே ஆவர். பள்ளர்கள் அல்லர். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும், மறுநாள் அனுப்பானடி தெப்பத் திருவிழாவிலும் பள்ளர்களின் தலைவனான அப்பகுதி ஊர் குடும்பனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, பள்ளர்களில் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
தலித் அரசியல் பேசும் அறிவுஜீவிகள் அனைவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் உள்ளிட்ட அனைவரையும் தலித்துகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, SC பட்டியலில் உள்ளவர்களைத் தீண்டத்தகாத தலித்துக்கள் என்றும், இதர BC, MBC பட்டியலில் உள்ளவர்களை உயர் சாதி இந்துக்கள் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். பெரியாரிய வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மார்க்சிய அறிஞர்கள் ஆகியோரும் இதனை வழிமொழிகின்றனர்.
இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், SC பட்டியலில் உள்ளதாலேயே குடும்பன் தாழ்ந்தவனாகவும் தீண்டாமைக்கு உட்பட்ட தலித்தாகவும் BC பட்டியலில் உள்ளதாலேயே காலாடி, மூப்பன், மண்ணாடி ஆகியோர்களெல்லாம் சாதி இந்துக்களாகவும் வாழ்ந்து வருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஒரே குழுவைச் சேர்ந்த அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே சமயத்தில் தலித்தாகவும், உயர் சாதி இந்துக்களாகவும் வாழ முடியும்? பள்ளர்கள் மட்டும் எந்தப் பட்டியலில் இருந்தாலும் தலித்துகள் என்றே அழைக்கப்படுவது ஏன்? மிகவும் பரிதாப நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC 24) உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆதிக்க சாதியினராக மாறிவிடுவார்களா?
சமீப காலமாக SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஆதிதிராவிடர் என்றே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது தமிழக அரசு. தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பின்போது SC பட்டியலில் உள்ள உட்பிரிவுகளுக்குப் பதிலாக அனைவரையும் ஆதிதிராவிடர் என்றே கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. BC, MBC, DNC, SC உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பள்ளர்களை, SC பட்டியலில் உள்ள ஆதி திராவிடர் (பறையர்) பெயரில் அழைப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறானது.
சாதிவாரி பகுப்பில் இவ்வளவு குழப்பங்கள் என்றால், தலித் அரசியலில் அதைவிடப் பெரிய குழப்பங்கள்! உண்மையில், தலித், தலித் ஒற்றுமை என்பதெல்லாம் ஒருவித மாயையே. தமிழர்களை சாதிய கண்ணோட்டத்தில் தலித்துகள் என்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் பிரித்து அவர்களை ஒன்றுபட முடியாத வண்ணம் குழப்பும் அரசியலும்கூட.
                                            --- செல்வா பாண்டியர் ----
                                     தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்