Wednesday, May 29, 2013

+2 தேர்வில் வாங்குவது மதிப்பெண்ணா? முட்டைகளா?

ஒரு பல் மருத்துவர் கூறியவை.
"அந்த பழங்குடி மக்கள் அழைப்பின் பேரில் நான் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்றேன். அங்கு இருக்கும் சின்ன பிள்ளைகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் அவ்வளவாக படிப்பது இல்லை. படிப்பில் அவர்கள் சுமார் தான். ஆனால் அந்த சுற்று வட்டாரத்தில் ஒவ்வொரு செடியின் குணத்தையும், அதன் பயன் பாட்டையும் துல்லியமாக அந்த பகுதி சிறுவர் சிறுமியர் தெரிந்து வைத்து இருக்கின்றனர். அதை என்னிடம் விளக்கியும் காட்டினர். ஒரு மருத்துவரான எனக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஆச்சரியமும், வெட்கமுமாக போய் விட்டது".
சொல்லுங்க.....இதில் யார் படிப்பாளி...? எது கல்வி?

KFC போன்ற துரித உணவு கூடங்களின் 'உணவு கையாளும் கோட்பாடு'. 
மரபணுவில் மாற்றம் செய்யப்பட கோழிகள்


* அவர்கள் தனியாக கோழி பண்ணைகள் போன்ற இத்தியாதிகளை நடத்துகின்றனர். அதில் இருந்தே கோழி இறைச்சி KFC க்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
* அவ்வாறு அவர்கள் ால் வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. எனவே அந்த கோழிகள் தங்கள் வாழ் நாள் முழுவதும் இறகோ, முடியோ இல்லாமல் வெறும் தோலுடனே வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு காரணம் இறகை பிய்க்கும் செலவு மிச்சம்.
* ஒரு கோழி இன்னொரு கோழியை சேதப்படுத்தாமல் இருக்க, கோழி குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போதே அதன் அலகுகள் வெட்டப்படுகின்றன.
* ஊசியின் மூலமாக மட்டுமே அந்த கோழிகளுக்கு உணவு செலுத்தப்படுகிறது.
* அப்படி உருவாக்கப்படும் கோழிகள், இயந்திரம் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டப்பட்டு, KFC களுக்கு அனுப்பப்படுகின்றன.
Source: http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=36


இந்திய (பிராய்லர் கோழி வளர்க்கும்) கல்வி முறை
கடந்த இரண்டு நாட்களாக கோமளவல்லி ஜெயா அம்மையாரும் ,சின்னமேளம் கருணாநிதி அவர்களும் ஆங்கில வழி கல்வியா அல்லது தமிழ் வழி கல்வியா என்று தங்களுக்குள் மோதி கொள்கின்றனர்.அதிலும் இந்த சின்ன மேளத்தின் சத்தம் தான் தாங்கலை. ஏதோ தமிழ் சமூகத்தை காக்க வந்த கர்ண பரம்பரை என்பது போல தூள் பறத்துக்கிறார்.

      அய்யா கருணா அவர்களே, உங்கள் திராவிடம் இந்த தமிழ் மண்ணில் கடந்த 500 வருடங்களாக போட்ட பேயாட்டத்தில் எம் தமிழ் மொழி பட்ட பாடு எங்களுக்கு தானே தெரியும்.எங்கள் தாய் நாட்டிற்கு நிகராக நாங்கள் மதித்த, உலகமே போற்றி கொண்டாடியே எம் தமிழை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடித்தது,கோவில் மொழியாக இருந்த எம் தமிழை 'நீச பாசை' என்று கோவிலில் இருந்து விரட்டி அடித்தது எல்லாம் யார் என்பதை நாங்கள் மறந்து விடுவோம் என்று மனப்பால் குடிக்கிறீரோ ?உலகிலேயே கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய தமிழனை, உங்கள் காட்டு மிராண்டி கூட்டம் தானே இந்த இழி நிலைக்கு தள்ளியது?

    பழம் கதைகளை விடுங்கள் கருணா அவர்களே, உங்கள் ஆட்சில் அரசு பள்ளிகளை எல்லாம் திட்டமிட்டு தரம் தாழ்த்தி விட்டு, தனியார் ஆங்கில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தெலுங்கர்களாக பார்த்து பார்த்து அனுமதி கொடுத்தீர்களே..?அந்த (தெலுங்கு) கல்வி தந்தைகள் தானே இன்று தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வியை எதிர்க்கிறார்கள்? அவர்களிடம் காட்ட வேண்டியது தானே உங்கள் தமிழ் பாசத்தை..!!! ஒருவேளை அம்மையார் கொண்டுவரும் அரசு ஆங்கில வழி பள்ளிகள் உம தெலுங்கு சகாக்கள் நடத்தி வரும் ஆங்கில வழி பள்ளிகளுக்கு வேட்டு வைத்து விடும் என்ற அச்சத்தில் தான் இன்று முண்டாசு கட்டி முறுக்கி கொண்டு நிற்க்கிரீரோ....? உங்கள் பசப்பும் வார்த்தையையும், நீலிக் கண்ணீரையும் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் எங்கள் தாத்தா காலத்து அப்பாவிகள் அல்ல சின்ன மேளனாரே......!!! நீங்கள் தமிழருக்கு ஆதரவாக பேசுவதை உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் உள்ள அரசியலை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறோம் நாங்கள்.

    அடுத்து கோமளவல்லி அம்மையாரிடம் வருவோம். மாண்பு மிகு அம்மையார் அவர்களே, எமக்கான கல்வியை எந்த மொழியில்  கொடுப்பது என்பதை பற்றி அப்புறம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த கல்வி திட்டமே ஒரு உதவாக்கரை கல்வி திட்டம் என்று உங்களுக்கு தெரியாதா... ?பாவம் உங்களுக்கு எப்படி தெரியும். 'வெள்ளியான் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்' என்று ஆங்கிலத்தில் டஸ்சு புஸு என்று பேசுவதை பெருமையாக நினைப்பவர் ஆயிற்றே....?

    வெள்ளையன் மெக்காலே பிரபு, தனது சொந்த நாட்டில் இருந்து பெருவாரியான வெள்ளையர்களை இங்கே அரசு இயந்திரத்தில் பணி அமர்த்துவது சிரமம் என்று கருதி, தனக்கு அடிபணிந்து இயங்க கூடிய அளவில் இங்கேயே ஆட்களை உருவாக்க, அவர் வடிவமைத்தது தான் 'மெக்காலே கல்வி திட்டம்'. அந்த முட்டாள் தனமான, சுயமாய் சிந்திக்க வழி வகுக்காத கல்வி திட்டத்தை தான் இன்று வரை இம்மி பிசகாமல் இந்தியர்கள் பின்பற்றி வருகிறார்கள்.இந்த லட்சணத்தில் அந்த முட்டாள் தனமான கல்வி திட்டத்தை எந்த மொழியில் இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் சண்டை வேறு...? வெட்கம்.



     இந்த உதவாக்கரை கல்வி திட்டத்தை பள்ளி இறுதி வரை படிக்கும் மாணவன் அரை முட்டாளாகவும், கல்லூரி இறுதி வரை படித்தால் முழு முட்டாளாகும், அரை அடிமை புத்தி உள்ளவனாகவும் ஆகிறான். அதுவே இந்த குப்பை கல்வி திட்டத்தின் உயர்ந்த படிப்புகளாக உள்ள (பி.ஹெச்டி, ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்) படிப்புகளை படித்து விட்டான் என்றால் அவன் அரசாங்கத்தின் முழு அடிமை குமாஸ்தாவாக அல்லவா வளர்த்தெடுக்கப் பட்டவன் ஆகிறான்...?தெரியாமல் தான் கேட்கிறோம். இந்த குப்பை கல்வி திட்டத்தை பின்பற்றி வந்த யாராவது (இந்தியாவில் இந்த அரசாங்க குமாஸ்தா வேலையை தவிர்த்து), பெரிய தலைவனாகவோ, அறிஞனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ உருவானார் என்று காட்ட முடியுமா..?



    உலகில் பல நாடுகளில் பேராசிரியர்கள் தான் பல புரட்சிகளுக்கு காரணமாக இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தான் இந்த பேராசிரியர்கள் 'புலம்பல் வாதிகளாக', அடிமையிலும் அடிமையாக, 'வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் மரணிக்கும்' ஜீவன்களாக உருவாகி கொண்டு இருக்கின்றனர்.

IIT முன்னாள் மாணவரான அரவிந்த் குப்தா போன்றோர் அறிவியலை எளிதாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு போல் சொல்லி கொடுக்கும் பொருட்டு, தனக்கு உதவியாளர்களாக 'எம்.எஸ்.சி' போன்ற உயர் படிப்பு படித்த மாணவர்களை துணைக்கு அமர்த்தி கொண்டார். அப்படி அமர்த்திய பின்பு தான் தெரிந்தது அந்த 'எம்.எஸ்.சி' மாணவர்களுக்கு தான் முதலில் அறிவியலின் அடிப்படைகளை கற்று கொடுக்க வேண்டும் என்று.
Source: http://www.arvindguptatoys.com/

".... The survey revealed that schools – even with good infrastructure, qualified teachers and high charging fees failed miserably in helping children make sense of the world. All the chalk-and-talk method, rote learning dulls the mind and does not help critical thinking so essential for living."
 -- Aravind Gupta. (Source: http://www.arvindguptatoys.com/arvindgupta/DH5.pdf)


இந்த சீரழிவுக்கு காரணம் இந்த மெக்காலே கல்வி திட்டம் தான். இதில் கொடுமை என்னவென்றால், இந்த கல்வி திட்டத்தை முன்வைத்த மெக்காலே பிரபு, 'இந்த கல்வி திட்டம் இந்தியர்களை ஆங்கிலேயே அடிமைகளாகவே வைத்திருக்கும்' என்று வெளிப்படையாக அறிவித்து விட்டே நடைமுறை படுத்துகிறார். இன்று நம்முடையே உள்ள தாழ்வு மனப்பான்மைக்கும், அவ நம்பிக்கைக்கும் மட்டுமல்ல, ஆங்கில மோகத்துக்கும் அடிப்படை காரணமே இந்த கல்வி திட்டம் தான்.

    கேள்வி கேக்கும் மாணவனை உருவாக்குவதே ஒரு உண்மையான கல்வித் திட்டத்தின் பணி. ஆனால் எதிர் கேள்வியே கேட்க தெரியாமல், யாரோ ஒருவர் தயாரித்து, யாரோ ஒருவர் சொல்லி கொடுக்கும் விசயங்களை, அந்த விஷயங்கள் கூட உண்மையா, பொய்யா என்று ஆராயாமல், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், முக்கியமான கேள்வி என்று உருப்போட்டு மனப்பாடம் செய்து, அதை பரீட்சை என்ற பெயரில் வாந்தி எடுத்து, அதில் வரும் மதிப்பெண்களையும், grade ஐயும் அளவுகோலை வைத்திருக்கும் இந்த கல்வி திட்டமும், படிப்பும் ஒரு படிப்பு தானா...? ஒரு மாணவன் தன வாழ்நாளில் பெரும் பகுதியை பள்ளியிலும், கலூரியிலும் தான் கழிக்கிறான். அவனுக்கு கொடுக்கும் கல்வியில் இத்துணை அயோக்கியத் தனம் தேவை தானா...? சிந்திப்பீர் மக்களே.

    இப்படி ஒரு முட்டாள் தனமான கல்வி திட்டத்தை கற்றதன் விளைவு தான், உலகின் நாகரிகங்களை உருவாக்கிய கடலோடி தமிழன் என்பதை மறைத்து விட்டு, இந்தியாவிற்கான கடல் வழியை கண்டு பிடித்தவர் 'வாஸ்கோடகாமா' என்று உளறிவைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு 'என்ன தான் இருந்தாலும் வெள்ளை காரன் வெள்ளை காரன் தான்' என்று மனதளவில் அடிமை தனத்தை ஒவ்வொரு விசயத்திலும் வளர்த்து கொண்டு இருக்கிறோம். கேள்வி கேட்டாலே அதிங்க பிரசங்கி என்றும், 'கையை கட்டு வாயை பொத்து' என்றும் கற்பனை வளத்துக்கு கடிவாளம் போடும் படிப்பு ஒரு படிப்பா....?

    தற்போது +2 தேர்வு முடிவுகள் வேறு வந்துவிட்டது. பேப்பரை பார்த்தாலே, 'வாங்க வாங்க கூறு மூணு ரூவா' என்கிற ரேஞ்சில் தங்கள் பள்ளியில் மதிப்பெண் சாதனைகளை பட்டியலிட்டு, கன ஜோராக கல்லா கட்ட தயாராகி வருகின்றனர் கல்வி தந்தை பள்ளிகள். 'செல்வா'வாகிய நான் விஜய் தொலைக் காட்சியில் பணி புரிந்த போது, நீயா நானா நிகழ்ச்சிக்காக 'கடந்த 15 வருடங்களில் +2 படிப்பில் மதிப்பெண் பெற்றவர்கள் தற்போது என்ன செய்கின்றனர்' என்று ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 99% பேர் நல்ல குமாஸ்தா வேலையில் காலத்தை ஒப்பேற்றி கொண்டு வருகின்றனர். மாறாக இவனுக்கு படிப்பே வராது என்று கண்டறியப்பட்ட, 1 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் பலர் சமூகத்தில் அந்தஸ்து வகிக்கும் 'நட்சத்திரங்களாக' திகழ்கின்றனர். இந்த உண்மை தெரியாமல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவ செல்வங்கள் சிலர் தற்கொலை வேறு செய்து கொள்கின்றனர்.

    ஆகவே அம்மையார் அவர்களே, நீங்கள் மாற்ற வேண்டியது கல்வி போதிக்கும் மொழியை அல்ல, கல்வி திட்டத்தை தான்....!!! உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் கருனாக்களை போல் அல்லாமல், நீங்களாவது கொஞ்சம் சிந்தித்து செயலாற்றுங்கள். இறுதியாக, வெள்ளையாக இருப்பவன் எல்லாம் நல்லவனும் அல்ல, ஆங்கிலம் பேசுபவன் எல்லாம் அறிவாளியும் அல்ல. இதை தாங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அன்னைக்கு சிலை வைப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.

--- செல்வா பாண்டியர் ---
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

5 comments:

  1. உலகின் நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன் என்பது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. இந்தியாவிற்கு கடல் வழியாக வாஸ்கோடகாமா இல்லை என்பதும் நகைப்பிற்கிடமாக உள்ளது. மெக்காலே கல்வியில் குறைபாடுகள் இருக்கலாம். அதுவே இல்லை என்றால் குருகுல கல்வியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு காலத்திற்குப் பின்னரும் மண்சோறு தின்று கொண்டு, ஜாதி வெறி பிடித்து வீடுகளை கொளுத்திக் கொண்டு இருக்கும் முட்டாள்கள் வேறு எங்காவது உள்ளனரா? ராமானுஜம் என்ற வைரத்தை பட்டை தீட்ட உறார்டி என்ற ஆங்கிலேயர்தானே உதவினார். இங்கிருந்த மூவேந்தர் பரம்பரையினர் அறிவியல் வளர்ச்சிக்கோ, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கோ செய்தது என்ன? தமிழ் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் மற்றும் அரசியல் மேடைகளில் பேசுபவர்களுக்கு வேண்டுமானால் சாராயக் காசு பெற்றுத் தரும். சேரிகளில் உழலும் சாமானியர்களுக்கு சோறு போடுமா?

    ReplyDelete
    Replies
    1. //உலகின் நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன் என்பது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று//

      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறை சொல்லட்டுமா....? இதெல்லாம் நீங்கள் சொல்லும் அடிமை கல்வி திட்டத்தில் சொல்லித் தர படுவது இல்லை.

      * The relevant sea-lord was King Pallas, a god of old Arcadia... The immortal sea-lord was said to be ‘'ever-incarnate in a dynasty of ancient kings’ whose symbol was a fish - as was the traditional symbol of Jesus.” (Laurence Gardner, Bloodline of the Holy Grail, pp. 166, 175)
      Source: http://watch.pair.com/dragon-lineage.html

      * இந்த கட்டுரை எல்லாம் என்னைக்காவது அடிமை புத்தி கல்வி திட்டத்தில் நீங்க படிச்சிருக்கீங்களா..? குறைந்த பட்சம் பார்த்து இருக்கீங்களா...?
      "....There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town
      in the interior of the country called Modura. The district from which pepper is carried
      down to Becare in canoes is called Cottonara..."
      Source: http://www.sdstate.edu/projectsouthasia/upload/Pliny-Voyages-to-India.pdf

      முதலில் மூவேந்தர் பற்றிய தவறான எண்ணத்தையும், தமிழன் தன மீதான தாழ்வு மனப்பான்மையும் விட்டு விட்டு வாருங்கள்.

      Delete
    2. உங்களின் இந்த அடிமை புத்தியை பற்றி தான் இந்த கட்டுரை சொல்கிறது தோழரே.

      Delete
  2. I have one question/doubt....
    In case if we introduce new way of teaching as you said/expect . Will be Science/Rational thinks/The ability to question everything in the subject?
    OR
    will be hitory of tamil caste/Ruled tamil castes vs low castes/temple festivlas and first greetings castes in the subject?

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி